ETV Bharat / bharat

PM Modi US visit: அரசுமுறைப் பயணமாக அமெரிக்கா புறப்பட்டார் பிரதமர் மோடி! - அதிபர் ஜோ பைடன்

பிரதமர் நரேந்திர மோடி அரசுமுறைப் பயணமாக இன்று அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். இந்த பயணம் இந்தியா - அமெரிக்கா இடையிலான உறவை வலுப்படுத்தும் என்று பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

PM Modi US visit
பிரதமர் மோடி
author img

By

Published : Jun 20, 2023, 11:20 AM IST

டெல்லி: பிரதமர் மோடி அரசு முறைப் பயணமாக இன்று(ஜூன் 20) காலை அமெரிக்காவுக்கு புறப்பட்டுச் சென்றார். அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் அழைப்பின் பேரில், முதல் முறையாக அதிகாரப்பூர்வ அரசுமுறைப் பயணமாக பிரதமர் மோடி அமெரிக்கா சென்றுள்ளார். இந்தப் பயணத்தில் நியூயார்க் மற்றும் வாஷிங்டனில் நடைபெறவுள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள இருப்பதாகவும், அதிபர் பைடன் உடன் பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

தனது அமெரிக்கா பயணம் குறித்து பிரதமர் மோடி தன்னுடைய பிளாக் போஸ்ட் (Blog post) இணையதளத்தில் விரிவாகப் பதிவிட்டுள்ளார். அதில், "அதிபர் ஜோ பைடன் மற்றும் ஜில் பைடன் ஆகியோரின் அழைப்பின் பேரில் நான் அரசுமுறைப் பயணமாக அமெரிக்காவுக்குச் செல்கிறேன். நியூயார்க்கில் நாளை ஐ.நா. சபையின் தலைமையகத்தில் சர்வதேச ஐ.நா. உறுப்பினர்களுடன் சேர்ந்து சர்வதேச யோகா தினத்தைக் கொண்டாட இருக்கிறேன். அதன் பிறகு, வாஷிங்டன் சென்று, அமெரிக்க அதிபர் பைடனை சந்திக்கிறேன். இந்த சந்திப்பு இருநாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்தும்.

இந்தியா-அமெரிக்க உறவுகள் பன்முகத்தன்மை கொண்டவை. இருநாட்டுக்கும் இடையே மிகப்பெரிய வர்த்தக உறவு உள்ளது. அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், கல்வி, சுகாதாரம், பாதுகாப்பு எனப் பல துறைகளில் இருநாடுகளும் தங்களது ஒத்துழைப்பை வழங்கி வருகின்றன. அதிபர் பைடன் மற்றும் பிற அமெரிக்கத் தலைவர்களுடனான எனது பேச்சுவார்த்தை, ஜி20, குவாட் உள்ளிட்ட பல்வேறு தளங்களிலும் இருநாடுகளின் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வாய்ப்பை வழங்கும். அதேபோல், அதிபர் ஜோ பைடன் மற்றும் ஜில் பைடன் இருவருடனும் அரசு விருந்தில் கலந்து கொள்ள இருக்கிறேன்.

இந்தப் பயணத்தின்போது, அமெரிக்க நாடாளுமன்றக் கூட்டத்தில் உரையாற்ற இருக்கிறேன். அதேபோல், அமெரிக்காவில் இந்திய சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் துடிப்பான இந்திய வம்சாவளியினரை சந்திக்க ஆவலுடன் இருக்கிறேன். அதேபோல், இருநாடுகள் இடையிலான வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவை மேம்படுத்துவதற்காக, சில முன்னணி நிறுவனங்களின் நிர்வாக அதிகாரிகளை சந்திக்க இருக்கிறேன். இந்தப் பயணம் இருநாடுகளின் உறவை வலுப்படுத்தும் என்று நம்புகிறேன்.

  • In USA, I will also get the opportunity to meet business leaders, interact with the Indian community and meet thought leaders from different walks of life. We seek to deepen India-USA ties in key sectors like trade, commerce, innovation, technology and other such areas.

    — Narendra Modi (@narendramodi) June 20, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

அமெரிக்கா பயணத்தைத் தொடர்ந்து, அதிபர் அப்தெல் ஃபத்தாஹ் எல்-சிசியின் அழைப்பின் பேரில் எகிப்து செல்கிறேன். வாஷிங்டனில் இருந்து கெய்ரோவுக்குச் செல்வேன். முதல் முறையாக எகிப்துக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த பயணம் இந்தியா - எகிப்து இடையிலான கூட்டாண்மையின் பிரதிபலிப்பாகும். இருநாடுகளின் பன்முக கூட்டாண்மையை மேம்படுத்தும் வகையில், அதிபர் சிசி மற்றும் எகிப்தின் உயர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறேன். அதேபோல், எகிப்தில் உள்ள புலம்பெயர்ந்த துடிப்பான இந்திய மக்களுடன் உரையாட இருக்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் மோடி வரும் 23ஆம் தேதி வாஷிங்டனில் இந்திய வம்சாவளியினரிடையே உரையாற்றவுள்ளதால், பிரதமர் மோடியைப் பார்க்கவும், வெள்ளை மாளிகைக்குச் செல்லவும் இந்தியர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இருப்பதாகத் தெரிகிறது. இதனால், அந்த நிகழ்ச்சிக்கான டிக்கெட்டை இந்தியர்கள் பலரும் போட்டி போட்டு வாங்கி வருவதாக தெரிகிறது.

இதையும் படிங்க: பிரதமர் மோடி - ஜோ பைடன் சந்திப்பு புது மைல்கல் - வெளியுறவு அமைச்சகம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.