சிம்லா: மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு அமைந்து எட்டு ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி, ஹிமாச்சலப்பிரதேசத்தின் சிம்லாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார்.
அதில், அரசு திட்டங்களின் பயனாளிகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். அரசின் திட்டங்கள் குறித்து மக்களிடம் கருத்துகளைக் கேட்டறிந்தார்.
பின்னர், பிரதமர் கிசான் திட்டத்தின்கீழ், 10 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு 11ஆவது தவணையாக 21 ஆயிரம் கோடி ரூபாயை பிரதமர் மோடி வழங்கினார். இத்திட்டத்தில், தகுதியான விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 6 ஆயிரம் ரூபாயை மூன்று தவணையாக மத்திய அரசு வழங்கி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் ஏற்கெனவே 10 தவணை வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், 11ஆவது தவணையை பிரதமர் நரேந்திர மோடி இன்று வழங்கினார்.
இதையும் படிங்க:ஜம்மு காஷ்மீரில் ஆசிரியை சுட்டுக்கொலை