"தீபாவளிக்கு உள்ளூர் பொருள்களை வாங்குவது பொருளாதாரத்திற்கு புதிய ஊக்கத்தை அளிக்கும்" என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியின் மக்களவை தொகுதியான வாரணாசியில் மக்கள் நல திட்டப்பணிகளை காணொலி வாயிலாக தொடங்கிவைத்தப்பின் பேசிய அவர், "நாட்டு மக்களுக்கு தீபாவளி வாழ்த்துகள்.
தீபாவளியில் உள்ளூர் பொருள்களுக்கு குரல் கொடுப்போம் என்ற மந்திரம் எல்லா இடங்களிலும் எதிரொலிக்கிறது என்பதை நீங்கள் இன்று காண்கிறீர்கள். ஒவ்வொரு நபரும் உள்ளூர் தயாரிப்புகளை பெருமையுடன் வாங்கும்போது, உள்ளூர் தயாரிப்புகளைப் பற்றி பேசுவார், அவற்றைப் பாராட்டுவார், எங்கள் உள்ளூர் தயாரிப்புகள் மிகவும் சிறப்பானவை என்ற செய்தியை மற்றவர்களுக்கு எடுத்துச் செல்வார்கள், இந்த செய்தி வெகுதூரம் செல்லும்.
உள்ளூர் அடையாளம் பலப்படுத்தப்படுவது மட்டுமல்லாமல், இந்த உள்ளூர் தயாரிப்புகளை உருவாக்கும் நபர்களும், அவர்களின் தீபாவளியும் மேலும் பிரகாசமாக இருக்கும்.
தீபாவளியில் நீங்கள் பயன்படுத்தும் அனைத்து பொருள்களையும் உள்ளூரில் வாங்குவது, இது அவற்றை உருவாக்குபவர்களை ஊக்குவிக்கும்" என்றார்.