ETV Bharat / bharat

இந்தியா உலகின் மருந்தகமாக திகழ்கிறது - அமைச்சர் மன்சுக் மாண்டவியா - பிரதமர் நரேந்திர மோடி

பொது மருந்துகளின் மிகப்பெரிய உற்பத்தியாளர் மற்றும் விநியோகிப்பாளராக திகழும் இந்தியா, உலகின் மருந்தகமாக திகழ்கிறது என அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

Mansukh Mandaviya
Mansukh Mandaviya
author img

By

Published : Oct 27, 2021, 8:32 PM IST

“மருந்துகள் மற்றும் மருத்துவ சாதனங்கள் துறையில் வாய்ப்புகள் மற்றும் கூட்டுகள்” குறித்த முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டை ஒன்றிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சர் மன்சுக் மாண்டவியா காணொலி மூலம் இன்று (அக்.27) தொடங்கி வைத்து உரையாற்றினார்.

மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் துறையில் சர்வதேச அளவில் இந்தியாவின் இடத்தை மேலும் வலுப்படுத்தும் லட்சியத்தின் ஒரு பகுதியாக, இந்த முதலீட்டாளர்கள் மாநாட்டை இன்வெஸ்ட் இந்தியாவுடன் இணைந்து மருந்துகள் துறை நடத்தியது.

உரையின் போது தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய டாக்டர் மாண்டவியா, "உலகின் மருந்தகம் என்று இந்திய சரியாக அழைக்கப்படுகிறது. பொது மருந்துகளின் மிகப்பெரிய உற்பத்தியாளர் மற்றும் விநியோகிப்பாளராக இந்திய திகழ்கிறது.

கோவிட் சமயத்தில் உலகின் 150-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இந்தியா மருந்துகளை வழங்கியது. இந்தியாவில் மருந்துத் தொழில் வெறும் வணிகம் அல்ல என்பதை இது காட்டுகிறது. இது நமது உணர்வுகளுடன் தொடர்புடையது என்றும் வெறும் லாப நோக்கத்துடன் மட்டும் நிர்வகிக்கப்படாமல், "வசுதேவ குடும்பம்" என்ற இந்தியத் தத்துவத்தால் வழிநடத்தப்படுகிறது.

மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் உலகம் முழுவதும் உள்ள முதலீட்டாளர்களை இந்தியாவில் முதலீடு செய்ய பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார் . இந்தியாவில் முதலீட்டாளர்கள் நியாயமான முறையில் நடத்தப்படுவார்கள்" என்று அவர் உறுதியளித்தார்.

இதையும் படிங்க: ஆர்யன் கானின் பிணை மனு வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.