நமோ செயலி பிரதமர் மோடியின் அதிகாரப்பூர்வ செயலியாகும். இச்செயலியை 1,100 பேரை பதிவிறக்கம் செய்யவைக்கும் நபர்கள் பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டாவைச் சந்திக்கலாம் எனவும் குறிப்பிட்டார்.
டெல்லியில் சுமார் மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட நபர்களை நமோ செயலியைப் பதிவிறக்கும் செய்யவைக்கும் பரப்புரையில் பாஜக ஈடுபட்டுவருவதாக ஆதேஷ் குப்தா கூறினார்.
தற்போது மக்களை இச்செயலி மூலம் இணைக்கும் வேலையில் டெல்லி பாஜக தீவிரமாக ஈடுபட்டுவருகிறது. கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் வரை செயலியைக் கொண்டுசேர்க்கும் வேலையில் அக்கட்சி இறங்கியுள்ளது.
இது குறித்து ஆதேஷ் குப்தா கூறுகையில், "நான் இதுபோன்ற 100-க்கும் மேற்பட்ட கூட்டங்களை நடத்தியுள்ளேன். இதற்கு மக்களும் கட்சித் தொண்டர்களும் உற்சாகமாக வரவேற்பை அளித்துவருகிறார்கள்" என்றார்.
இந்தச் செயலியைப் பதிவிறக்கம் செய்வதன் மூலம், பயனாளர்கள் நேரடியாகப் பிரதமருடன் தொடர்பில் இருக்கலாம். ஒன்றிய அரசின் திட்டங்கள், திட்டங்கள் குறித்தான அப்டேட்கள் அனைத்தையும் அறிந்துகொள்ளலாம்.
இதையும் படிங்க: வெற்றியும் தோல்வியும் வாழ்க்கையில் சகஜம் - பிரதமர் மோடி