ETV Bharat / bharat

இந்தியாவில் இருந்து மாயமான பழங்காலப் பொருட்களை மீட்க 'கலாச்சார பாரம்பரிய அணி' - நாடாளுமன்ற குழு பரிந்துரை! - கலாச்சார பாரம்பரியக் குழு

இந்தியாவில் இருந்து மாயமான பழங்காலப் பொருட்களை மீட்கும் நடவடிக்கைகளை துரிதப்படுத்தும் பொருட்டு, 'அர்ப்பணிப்பு கலாச்சார பாரம்பரிய அணி' அமைக்க நாடாளுமன்றத்திற்கான போக்குவரத்து, சுற்றுலா மற்றும் கலாச்சாரத்திற்கான நிலைக்குழு பரிந்துரை செய்து உள்ளது.

இந்தியாவில் இருந்து மாயமான பழங்காலப் பொருட்களை மீட்க 'கலாச்சார பாரம்பரிய அணி' - நாடாளுமன்ற குழு பரிந்துரை!

author img

By

Published : Jul 25, 2023, 10:03 AM IST

டெல்லி: நாட்டில் இருந்து திருடப்பட்ட தொல்பொருட்களை மீட்பதற்காக ஒரு "அர்ப்பணிப்பு கலாச்சார பாரம்பரிய அணியை" நிறுவுவதற்கு நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரை செய்து உள்ளது. பல்வேறு நாடுகளால் பின்பற்றப்படும் பல்வேறு அம்சங்களை மீட்டெடுப்பதில் பயிற்சி பெற்ற அதிகாரிகள் குழுவையும் அமைக்க நாடாளுமன்றத்தில் நேற்று (ஜுலை 24) போக்குவரத்து, சுற்றுலா மற்றும் கலாச்சாரம் துறை தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழு, இரு அவைகளிலும் தாக்கல் செய்த அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்திய தொல்பொருட்களின் சட்டவிரோத வர்த்தகம் மற்றும் நமது உறுதியான கலாச்சார பாரம்பரியத்தை மீட்டெடுப்பது மற்றும் பாதுகாப்பதில் உள்ள சவால்கள் என்ற தலைப்பில் 348வது அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ள “பாரம்பரிய திருட்டு” நிகழ்வை தடுக்கும் பொருட்டு மற்றும் பல துறைகளின் மறுபரிசீலனை செயல்முறையை விரைவுபடுத்துவதற்கு அரசை இந்த நிலைக்குழு பரிந்துரைத்து உள்ளது.

இது தொடர்பாக ராஜ்யசபா செயலகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது, பணிக்குழுவில் உள்துறை அமைச்சகம் (காவல் மற்றும் விசாரணை), வெளியுறவு அமைச்சகம் (வெளிநாட்டு அரசாங்கங்களுடனான ஒருங்கிணைப்பு), இந்திய தொல்பொருள் ஆய்வு (ASI) மற்றும் மூத்த அறிஞர்கள் மற்றும் நிபுணர்கள் ஆகியோர் இருக்க வேண்டும். தொல்பொருள் ஆராய்ச்சி மற்றும் பாதுகாப்பை மேற்கொள்வதைத் தவிர திருடப்பட்ட பழங்காலப் பொருட்களை மீட்கும் பெரும் பொறுப்பும் இந்திய தொல்லியல் துறைக்கு உள்ளதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.

இத்தாலி, கனடா, நெதர்லாந்து, அமெரிக்கா, ஸ்காட்லாந்து, ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் "மாயமான தொல்பொருட்களைக் கண்காணிப்பதிலும், அதனை மீட்டெடுப்பதிலும் தனித்தனியாக தங்கள் முயற்சியில் கவனம் செலுத்தும் வல்லுநர்கள் குழுவுடன் அர்ப்பணிக்கப்பட்ட கலாச்சார பாரம்பரியக் குழுக்களை நிறுவியுள்ளன.

"மாயமான பழங்காலப் பொருட்களை மீட்பதற்காக பிரத்யேக கலாச்சார பாரம்பரியக் குழுவை பயிற்சி பெற்ற அதிகாரிகளைக் கொண்டு அமைப்பது இந்திய தொல்லியல் ஆய்வுத் துறைக்கு மிகவும் சாதகமாக இருக்கும் என்று குழு பரிந்துரை செய்து உள்ளது. இந்தக் குழுவானது பல்வேறு நாடுகளின் மீட்டெடுப்பு நடைமுறைகளின் தேவைக்கேற்ப பல்வேறு அம்சங்களில் பயிற்சி அளிக்கப்படலாம்" என்று அந்தக் குழு தனது அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளது.

நாட்டில் உள்ள பழங்காலப் பொருட்களின் முதன்மை தரவுத்தளத்தை உருவாக்குவதற்கு மாநில அரசுகளின் கையடக்கத்தையும், ஊக்குவிப்பையும் உறுதி செய்வதற்காக மத்திய துறை திட்டத்தை உருவாக்குவதற்கான முன்மொழிவை ஆய்வு செய்ய அமைச்சகத்திற்கு குழு பரிந்துரைத்து உள்ளது.

நமது உறுதியான கலாச்சார பாரம்பரியத்தை பதிவு செய்வதற்கு ஆர்வமுள்ள மற்றும் தொடர்புடைய முகவர் அல்லது பங்குதாரர்களின் ஈடுபாட்டிற்காக அமைச்சகம் ஒரு ஊக்குவிப்பு திட்டத்தை உருவாக்கலாம் என்று அக்குழு மேலும் தெரிவித்து உள்ளது.

நினைவுச் சின்னங்கள் மற்றும் தொல்பொருட்களுக்கான தேசியப் பணியின் (NMMA) நடவடிக்கைகளில், குழு அதன் தொடக்கத்திலிருந்து 15 ஆண்டுகளில், மொத்தம் மதிப்பிடப்பட்ட 58 லட்சம் பழங்காலப் பொருட்களில் சுமார் 16.8 லட்சம் பழங்காலச் சின்னங்கள், அதாவது 30 சதவிகிதம் அளவில் இன்று வரை ஆவணப்படுத்தப்பட்டு உள்ளன என்று குறிப்பிட்டு உள்ளது. 58 லட்சம் என்பது ஒரு மதிப்பீடு மட்டுமே என்றும், இந்தியாவில் இன்னும் பல பழங்காலப் பொருட்கள் இருக்கலாம் என்றும் இந்திய தொல்லியல் ஆய்வுத் துறை இயக்குநர் இக்குழுவிடம் தெரிவித்து உள்ளார்.

NMMA அமைப்பின் ஆவணப்படுத்தலின் வேகம் மிகவும் கவலையளிக்கிறது என்று அந்த அறிக்கையில் மேற்கோள் காட்டப்பட்டு உள்ளது. 2013ஆம் ஆண்டில், அதன் அசல் அறிக்கை வெளியிடப்பட்டு ஒன்பது ஆண்டுகள் கடந்த பின்னரும் கூட, CAG மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து அறிய விரும்புவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நாடு முழுவதும் உள்ள 55 இந்திய தொல்லியல் ஆய்வுத் துறை தள அருங்காட்சியகங்களில் ஆவணப்படுத்தல் தொடங்கப்பட்டு 2023ஆம் ஆண்டு இறுதிக்குள் முடிக்கப்படும் என்று இந்திய தொல்லியல் ஆய்வுத் துறையால் தெரிவிக்கப்பட்டு உள்ளதாக குழு தெரிவித்து உள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள சந்திரகேதுகர் போன்ற இந்திய தொல்லியல் ஆய்வு தளங்கள் உலகளவில் சட்டவிரோத பழங்கால சந்தைகளில் விற்கப்படும் ஏராளமான கலைப்பொருட்களின் ஆதாரங்கள் என்று ஊடக அறிக்கைகள் மூலம் அறிந்து கொண்டதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

நாடாளுமன்றத்தின் பொது கணக்குக் குழுவின் (PAC) அறிக்கையில், தொல்பொருட்கள் பாதுகாப்பிற்காகப் பல ஆண்டுகளாகப் பெருமளவிலான பொதுப் பணம் செலவிடப்பட்டதைக் குறிப்பிட்டு உள்ளது. இந்த இரண்டு அமைப்புகளின் தொன்மை இருந்தும், இந்திய பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்காக பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் மற்றும் ஒதுக்கப்பட்ட நிதி, பாதுகாப்பின் பூர்வாங்கப்படியான ஆவணப்படுத்தல் பணி திருப்திகரமான முன்னேற்றத்தைக் காட்டவில்லை என்று அக்குழு குறிப்பிட்டு உள்ளது.

மாநில அரசுகள் மற்றும் கலை மற்றும் கலாச்சார பாரம்பரியத்திற்கான இந்திய தேசிய அறக்கட்டளை (INTACH), கலாச்சார உறவுகளுக்கான இந்திய கவுன்சில் (ICCR), இந்திரா காந்தி தேசிய கலை மையம் (IGNCA), தேசிய கலாச்சார நிதியம் (NCF) போன்ற மாநில அரசுகள் மற்றும் தொடர்புடைய அமைப்புகளை ஈடுபடுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை அமைச்சகம் அல்லது இந்திய தொல்லியல் ஆய்வுத் துறை மேற்கொள்ளலாம் என்றும் குழு பரிந்துரை செய்து உள்ளது.

குழு தனது அறிக்கையில், கலாச்சார அமைச்சகத்திற்கான ஒட்டுமொத்த பட்ஜெட் ஒதுக்கீடு மொத்த பட்ஜெட்டில் 0.075 சதவீதம் மட்டுமே, இது மிகவும் போதுமானதாக இல்லை. சீனா, இங்கிலாந்து, அமெரிக்கா, சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் கலை மற்றும் கலாச்சாரத்தை மேம்படுத்துவதற்காக தங்கள் பட்ஜெட்டில் சுமார் 2-5 சதவீதத்தை செலவிடுவதாக அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க: ரூ.7 லட்சம் கோடிக்கும் மேலான பொதுக்கடனில் தமிழ்நாடு - மத்திய அரசின் தரவுகள் கூறுவது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.