டெல்லியில் நடந்துவரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நேற்று (டிசம்பர் 22) மாநிலங்களவையில் தமிழ்நாட்டில் உள்ள நரிக்குறவர், குருவிக்காரர்கள் சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கும் மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா டிசம்பர் 15ஆம் தேதி மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு அரசின் பரிந்துரையின்படி இந்த மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்தியபழங்குடியினர் நலத்துறை அமைச்சர் அர்ஜுன் முண்டா கூறுகையில், இதுபோன்ற சமூகங்கள் நாடு முழுவதும் மிகவும் குறைவான எண்ணிக்கையில் இருக்கின்றன. அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய உரிமைகளை அரசு வழங்கும். தமிழ்நாடு உள்பட உத்தரப் பிரதேசம், இமாச்சல பிரதேசம், கர்நாடகா மாநிலங்களுக்கும் இதுபோன்ற கோரிக்கைகள் வந்துள்ளன. அதை மத்திய அரசு நிறைவேற்றிவருகிறது" எனத் தெரிவித்தார்.
இந்த மசோதாவை திமுகவின் எஸ். முகமது அப்துல்லா, கேஆர்என் ராஜேஷ் குமார், அதிமுகவின் தம்பிதுரை, பாஜகவின் கே லட்சுமணன், ஒய்எஸ்ஆர்சிபியின் ரியாகா கிருஷ்ணய்யா, ஆம் ஆத்மியின் சாந்த் பல்பீர் சிங் ஆகியோர் ஆதரித்தனர். இதனிடையே எம்பி தம்பிதுரை, நரிக்குறவர், குருவிக்காரர்கள் போலவே தமிழ்நாட்டின் மீனவர்கள், வால்மீகி, வடுக மற்றும் குருபா சமூகங்களையும் பழங்குடி பட்டியலில் சேர்க்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இதேபோல, மாநிலங்களவையில் கர்நாடகாவில் காடு குருபா மற்றும் பெட்டா குருபா சமூகங்களையும் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கும் மசோதா நிறைவேற்றப்பட்டது.
இதையும் படிங்க: முகக் கவசம் கட்டாயம் - மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா அறிவுறுத்தல்