நாளந்தா: பீகார் மாநிலம், தொராகி கிராமத்தைச் சேர்ந்தவர், சனோஜ் சிங். காவலாளியாகப் பணியாற்றி வந்த இவர், கடந்த 15 நாட்களுக்கு முன் கொலை செய்யப்பட்டார். இக்கொலை வழக்கில், சனோஜ் சிங்கின் மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையின் அடிப்படையில், தொராகி கிராமத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. கடந்த 15ம் தேதி, கட்டுமான பணி நடந்து வரும் இடத்தில் இருந்த காவலாளி சனோஜ் சிங் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார், சடலத்தை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடி வந்தனர்.
இச்சம்பவம் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், சனோஜை குத்திக்கொன்றது அவரது மகன் ஸ்ரீகேஷ் குமார் என்பது தெரியவந்தது. குடும்பத் தகராறில் அவர் இச்செயலில் ஈடுபட்டது கண்டறியப்பட்டது. தந்தை சனோஜை கொலை செய்ய, முன்கூட்டியே திட்டமிட்ட ஸ்ரீகேஷ்குமார், அதற்காக ஆன்லைனில் ஆர்டர் செய்து பிரத்யேகமாக கத்தி வாங்கியதும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
கொலையாளி ஸ்ரீகேஷ் குமாரிடம் இருந்து கத்தி மற்றும் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாகவும் காவல் துணை கண்காணிப்பாளர் ராஜ்கிர் தெரிவித்துள்ளார். குடும்பத் தகராறில் தந்தையை மகன் கத்தியால் குத்திக்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்டுத்தியுள்ளது.
இதையும் படிங்க: 'நான் தம் அடிக்கிற ஸ்டைல பாத்து'... விமானத்தில் சிகரெட் பிடித்தவர் கைது!