லக்னோ : பிரபல ரவுடியும் அரசியல்வாதியுமான அடிக் அகமது மற்றும் அவரது சகோதரர் அஸ்ரப் ஆகியோரை போலீசார் முன்னிலையில் மர்ம நபர்கள் நடுரோட்டில் வைத்து துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அடிக் அகமது துப்பாக்கிச்சூடு குறித்து கருத்து தெரிவித்த அகிலேஷ் யாதவ், மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு சட்டம் ஒழுங்கை மோசமான நிலைக்கு கொண்டு சென்றதாகக் கூறினார்.
-
#Watch how #AtiqueAhmed and his brother Ashraf Ahmed shot in Prayagraj Hospital premises. #PrayagrajNews pic.twitter.com/lWRCpjiUP4
— ETVBharat MP (@ETVBharatMP) April 15, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#Watch how #AtiqueAhmed and his brother Ashraf Ahmed shot in Prayagraj Hospital premises. #PrayagrajNews pic.twitter.com/lWRCpjiUP4
— ETVBharat MP (@ETVBharatMP) April 15, 2023#Watch how #AtiqueAhmed and his brother Ashraf Ahmed shot in Prayagraj Hospital premises. #PrayagrajNews pic.twitter.com/lWRCpjiUP4
— ETVBharat MP (@ETVBharatMP) April 15, 2023
அகிலேஷ் யாதவ் தன் ட்விட்டர் பக்கத்தில், "உத்தரப் பிரதேசத்தில் குற்றச்செயல்கள் உச்சத்தை எட்டி உள்ளதால் குற்றவாளிகளின் மன உறுதியும் அதிகரித்து உள்ளது. போலீசாரின் பாதுகாப்பு வளையத்திற்குள் புகுந்து பகிரங்கமாக துப்பாக்கிச் சூடு நடத்தி ஒருவர் கொல்லப்படும் போது, பொது மக்களின் பாதுகாப்பு என்னவாகும்? என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் உருவாகியுள்ளது. சிலர் வேண்டுமென்றே இப்படியான சூழலை உருவாக்குவது தெரிகிறது" எனப் பதிவிட்டு உள்ளார்.
அதேபோல் அடிக் அகமது மற்றும் அவரது சகோதரர் அஸ்ரப் கொலைச் சம்பவம் இரக்கமற்றச் செயல் என்றும்; இது மாநிலத்தில் அராஜகத்தின் உச்சபட்ச சூழல் நிலவுவதை எடுத்துக் காட்டுவதாகவும் பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி. டேனிஷ் அலி தெரிவித்து உள்ளார். மேலிடத்தின் உந்துதல் இல்லாமல் இதுபோன்ற துப்பாக்கிச்சூடுகள் நடைபெறாது என்றும்; ஜனநாயக ஆட்சியில் சட்டத்திற்கு எதிராக நிகழ்த்தப்பட்ட குற்றத்திற்கு மாநில அரசினை கலைத்திருக்க வேண்டும் என அவர் கூறினர்.
மாநிலங்களவை உறுப்பினரும் பிரபல வழக்கறிஞருமான கபில் சிபில், ரவுடிகளுடன் சேர்த்து மாநிலத்தில் சட்டம் ஒழுங்கும் படுகொலை செய்யப்பட்டதாக கூறினார். வழக்கறிஞர் உமேஷ் பால் கடத்தல் வழக்கில் ரவுடி அடிக் அகமது, அவரது சகோதரர் அஸ்ரப் உள்ளிட்டோருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது.
இதனிடையே உமேஷ் பால் கொலை வழக்கில் தொடர்புடையதாக அடிக் அகமதுவின் மகன் ஆசாத்தை போலீசார் என்கவுன்ட்டர் செய்தனர். ஆசாத்தின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்க அடிக் அகமதுவுக்கு போலீசார் அனுமதி மறுத்தனர். இந்நிலையில், மருத்துவப் பரிசோதனைக்காக அழைத்துச்செல்லப்பட்ட அடிக் அகமது மற்றும் அஸ்ரப் ஆகியோர் மர்ம நபர்களால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டனர்.
பத்திரிகையாளர் பாணியில் வந்த 3 பேர் எதிர்பாராத நேரத்தில் அடிக் அகமது மற்றும் அஸ்ரப் ஆகியோர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு சரணடைந்தனர். 3 பேரையும் கைது செய்த போலீசார் துப்பாக்கிச் சூட்டிற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அடிக் அகமது கொலை செய்யப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து உத்தரப்பிரதேச மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. மக்கள் கூட்டமாக சாலையில் நடந்து செல்ல கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது. அத்தியாவசியப் பணிகள் தவிர்த்து பொது மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.
பதற்றத்திற்குரிய இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர். முக்கிய இடங்களில் ரோந்து சென்று பாதுகாப்புப் பணியில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.
இதையும் படிங்க : Uttar Pradesh: அடிக் அகமது சுட்டுக் கொலை - உ.பி.யில் 144 தடை உத்தரவு அமல்!