ETV Bharat / bharat

இந்தியாவில் 200ஐ எட்டிய ஒமைக்ரான்

author img

By

Published : Dec 21, 2021, 3:42 PM IST

நாடு முழுவதும் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 200 எட்டியுள்ளதால், மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.

omicron-count-hits-200-in-india
omicron-count-hits-200-in-india

டெல்லி: கரோனா தொற்றின் இரண்டாம் அலை குறைந்துவரும் நிலையில், உலகம் முழுவதும் மெல்ல மெல்ல இயல்பு வாழ்க்கை திரும்பி வந்தது. இதனிடையே கரோனா உருமாற்றம் அடைந்து டெல்டா, டெல்டா பிளஸ் என்று மக்களிடையே பீதியை கிளப்பியது. இந்த தொற்றுகளும் ஓய்ந்த நிலையில், ஒமைக்ரான் வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.

தென் ஆப்பிரிக்காவில் அடையாளம் காணப்பட்ட ஒமைக்ரான் வெறும் 2 வாரத்தில் போட்ஸ்வானா, ஹாங்காங், சீனா, ஜப்பான், இந்தியா, பிரிட்டன் உள்ளிட்ட 91 நாடுகளுக்கு பரவியுள்ளது. இந்தியாவிலும் கடந்த ஒரு வாரத்தில் 30 பேருக்கு மட்டுமே உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று 200 பேருக்கு உறுதியாகி உள்ளது. அப்படி மொத்தம் 13 மாநிலங்களில் ஒமைக்ரான் கண்டறியப்பட்டுள்ளது.

எந்த மாநிலத்தில் அதிகம்

மகாராஷ்டிரா, டெல்லி, தெலங்கானாவில் ஒமைக்ரான் தொற்று அதிகமாக உள்ளது. குறிப்பாக மகாராஷ்டிரா, டெல்லியில் தலா 54 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கர்நாடகாவில் 19, ராஜஸ்தானில் 18, கேரளாவில் 15, குஜராத்தில் 14, உத்தரபிர தேசத்தில் 2, ஆந்திரா, சண்டிகர், தமிழ்நாட்டில் தலா ஒருவருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதியாகியுள்ளது.

இதனிடையே பிரிட்டனில் ஒமைக்ரான் காரணமாக அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறுகையில், "விரைவில் ஒமைக்ரான் பேரலை ஏற்படக்கூடும். இதற்கு எதிராக போடப்பட்ட 2 டோஸ் கரோனா தடுப்பூசிகளும் பயன் அளிக்காது. மக்கள் மூன்றாவதாக பூஸ்டர் டோஸ் எடுத்துக் கொண்டால் பாதிப்பு குறைய வாய்ப்புள்ளது.

இதையும் படிங்க: டெல்லியில் தனியார் மருத்துவமனைகள் ஒமைக்ரான் சிகிச்சை மையங்களாக மாற்றம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.