போலங்கீர்: ஒடிசாவின் போலங்கிர் மாவட்டத்தின் பாலதுங்குரி கிராமத்தில் இருந்து ஒரு கோவிட் -19 பாதிக்கப்பட்டவரின் சடலம் இறுதிச் சடங்குகளுக்காக சைக்கிளில் கொண்டு செல்லப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஒரு நபர் தனது தந்தையின் உடலை தகனத்திற்காக சைக்கிளில் சுமந்து செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவிவருகிறது.
கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த அயோதியா ஷாஹூ என்பவரின் உடலை தகனம் செய்வதற்கு உறவினர்கள் உதவ மறுத்துவிட்டதால், அவரது மகன் தாமோதர் சாஹூ மிதிவண்டியில் அவரை சுமந்துச் சென்று இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கு அருகிலுள்ள தகன மேடைக்கு எடுத்துச் சென்று இறுதிச் சடங்குகளை நடத்தினார். இது குறித்து உள்ளூர் நிர்வாகமோ அல்லது காவல் துறையோ பதிலளிக்கவில்லை.
இதையும் படிங்க: பொறியியல் மாணவி தற்கொலை: காவல் கண்காணிப்பாளர் விளக்கமளிக்க நோட்டீஸ்!