ETV Bharat / bharat

"நாட்டின் முன்னேற்றத்திற்கான தடைகள் அகற்றப்பட வேண்டும்" - வெங்கையா நாயுடு வேண்டுகோள்!

நாட்டின் முன்னேற்றத்திற்கான தடைகள் அகற்றப்பட வேண்டும் என குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்தியாவின் முன்னேற்றத்திற்கான தடைகள் அகற்றப்பட வேண்டும் - வெங்கையா நாயுடு வேண்டுகோள்!

author img

By

Published : Aug 9, 2022, 9:24 AM IST

புதுடெல்லி: குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் நாளையுடன் (ஆகஸ்ட் 10) முடிவடைகிறது. எனவே அடுத்த குடியரசு துணைத்தலைவராக வாக்கெடுப்பின்படி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜெகதீப் தன்கர் ஆகஸ்ட் 11 ஆம் தேதி பதவியேற்கவுள்ளார். இதனிடையே மாநிலங்களவை தலைவரும், குடியரசு துணைத்தலைவருமான வெங்கையா நாயுடுவின் பிரிவு உபச்சார நிகழ்வு நேற்று மாநிலங்களவையில் நடைபெற்றது.

அப்போது பேசிய வெங்கையா நாயுடு, “மேலவையின் 257 வது கூட்டத்தொடரில் இடையூறு ஏற்பட்டதால் 47 மணி நேரத்திற்கும் மேலான காலம் வீணடிக்கப்பட்டுள்ளது. இது நாடாளுமன்றத்தின் செயல்பாட்டில் உள்ள சோகமான நிகழ்வாகும். அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் தொடர்பாக 4 மணி நேரத்திற்கும் மேலாக இடம்பெற்ற குறுகிய கால விவாதத்தில், 33 உறுப்பினர்கள் பங்கேற்ற நிலையில், விவாதிக்கப்பட்டது.

அமர்வின் போது 5 அரசு மசோதாக்கள் மட்டுமே பரிசீலிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டன. 27 தனிப்பட்ட உறுப்பினர்களின் மசோதாக்களும் அறிமுகப்படுத்தப்பட்டன. தனிப்பட்ட உறுப்பினர்களின் தீர்மானங்கள் எதனையும் ஏற்க முடியாது. கடந்த ஐந்து வருடங்கள் என்பது எனது வாழ்க்கையில் மிகவும் அறிவு சார்ந்த மற்றும் உற்சாகமான ஆண்டுகள் ஆகும்.

தொற்றுநோய்களின்போது உறுதியான நடவடிக்கைகளை எடுத்த மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு வாழ்த்துகள். பன்னாட்டு நட்புறவில், இந்தியாவில் ஓர் உணரக்கூடிய மாற்றத்தை நான் கண்டுள்ளேன். என்னுடைய அனுபவத்தில் உருவான நல்லுறவும் புரிந்துணர்வும் மாநிலங்களவையில் பல முக்கிய சட்டங்கள் இயற்றப்படுவதை கண்காணிக்க உதவியுள்ளது.

இந்திய நாடாளுமன்றத்தின் அந்தஸ்துக்கு ஏற்ற வகையில் அரசியல் கட்சிகளும், அவையில் உள்ள உறுப்பினர்களும் செயல்பட வேண்டும். இந்தியாவின் 75 வது ஆண்டு சுதந்திரக் கொண்டாட்டத்தில், இந்தியா நீண்ட தூரத்திற்கு உயர்ந்து வந்துள்ளது. ஆனால் முன்னேற்றத்திற்கு இன்னும் பல வலிமையான தடைகள் உள்ளன.

அவை அடையாளம் காணப்பட்டு அகற்றப்பட வேண்டும். அனைத்து குடிமக்களுக்கும் சமமான அணுகலை உறுதி செய்ய வேண்டிய அவசியம் உள்ளது. தகுதி, ஒழுக்கமுறை மற்றும் விவாதம் ஆகிய மூன்றை அனைவரும் பின்பற்ற வேண்டும். அதேநேரம் இடையூறுகளை நாட வேண்டாம். நாடாளுமன்றத்தை தொடர்ந்து சீர்குலைப்பது ஜனநாயகத்தை சீர்குலைக்கும் செயலாகும்" என்றார்.

இதையும் படிங்க: 'மாநிலங்களவையின் பணிகள் 70% அதிகரிப்பு' - வெங்கையா நாயுடு வழியனுப்பு விழாவில் பிரதமர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.