டெல்லி: உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவில் தனியார் கட்டுமான நிறுவனத்தால் கட்டப்பட்ட 40 மாடிகள் கொண்ட இரட்டைக் கட்டடங்கள் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கில் விதி மீறல் நடந்திருப்பது உறுதியானதால், இரண்டு கட்டடங்களையும் இடிக்க 2014ஆம் ஆண்டு உத்தரவிடப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த கட்டுமான நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
இந்த மேல்முறையீடு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டு, ஆகஸ்ட் 21ஆம் கட்டடத்தை இடிக்க உத்தரவிப்பட்டது. இதனிடையே தொழில்நுட்ப வல்லூநர் குழு 40 மாடிகள் கொண்ட கட்டடத்தை இடிப்பதற்கான வெடிபொருள் மற்றும் சென்சார் சாதனங்களை தயார் செய்யவும், அதனை பொருத்தவும் ஒரு வாரம் அவகாசம் கோரியது. இதனையேற்ற உச்ச நீதிமன்றம் ஆகஸ்ட் 28ஆம் தேதி இடிக்க உத்தரவிட்டது.
அந்த வகையில், தொழில்நுட்ப வல்லூநர் குழு 2 கட்டடங்களிலும் 9,400 துளைகள் இட்டு, அதில் 3,500 கிலோவுக்கும் அதிகமான வெடிபொருட்களை நிரப்பும் பணியை செய்துவந்தது. இந்த பணி நேற்று நிறைவடைந்ததாக தெரிவிகப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து சென்சார்கள் மற்றும் டெட்டனேட்டர்கள் பொருத்தும் பணி நடந்துவருகிறது. இந்த பணி 26ஆம் தேதிக்குள் முடிந்துவிடும். அதன்பின் இணைப்புகள் மறுபரிசீலனை செய்யப்பட்டு, தகர்க்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: முகமது நபிகள் குறித்து சர்ச்சை கருத்து... பாஜக எம்எல்ஏ கைது...