ETV Bharat / bharat

குழந்தைகளுக்கு மாரடைப்பு அபாயம்; ஆய்வு முடிவுகள் கூறுவது என்ன?

குழந்தைப் பருவங்களில் விளையாட்டு உள்ளிட்டவற்றை தவிர்த்துவிட்டு ஒரே இடத்தில் அமர்ந்து கேம் விளையாடுவது, ஏதும் செய்யாமல் சும்மா இருக்கும் குழந்தைகளுக்கு மாரடைப்பு, பக்கவாதம் உள்ளிட்ட நோய் பாதிப்புகள் அதிகளவில் தாக்குவதாக பின்லாந்தை சேர்ந்த ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளார்.

குழந்தைகளுக்கு மாரடைப்பு அபாயம்
குழந்தைகளுக்கு மாரடைப்பு அபாயம்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 25, 2023, 10:25 PM IST

ஹைதராபாத்: சும்மா உட்கார்ந்திருந்தால் உயிருக்கு ஆபத்து என்று சொன்னால் நம்ப முடிகிறதா? அதிக நேரம் உட்கார்ந்தால், தூங்கினால், பேசினால் உயிருக்கு ஆபத்து என்ற வரிசையில் தற்போது அதிக நேரம் ஏதும் செய்யாமல் உட்கார்ந்திருந்தால் விரைவில் இறக்க நேரிடும் என ஃபின்லேண்டைச் சேர்ந்த ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

ஃபின்லேண்டைச் சேர்ந்த ஆண்ட்ரூ அக்பஜே, குயோபியோவில் உள்ள கிழக்கு பின்லாந்து பல்கலைக்கழகம் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இவர் சமீபத்தில், குழந்தைகளின் குழந்தை பருவம் முதல் முதிர் வயது வரை ஆய்வை மேற்கொண்டார். இந்த ஆய்வில், 11 வயது 15, 17 வயது என பல்வேறு அடிப்படைகளில் குழந்தைகள் உட்படுத்தப்பட்டனர். இந்த ஆய்வில் மொத்தம் 766 குழந்தைகள் உட்படுத்தப்பட்ட நிலையில், அதில் 55% பெண் குழந்தைகளும் 45% ஆண் குழந்தைகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வில் 11 வயதிலிருக்கும் குழந்தைகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஆய்விற்காக அவர்களின் கையில் ஸ்மார்ட் வாட்ச் கட்டப்பட்டு அவர்களின் அன்றாட வாழ்க்கை முறைகள் கண்காணிக்கப்பட்டு வந்தது. தேர்வு செய்யப்பட்ட இந்த குழந்தைகளை 7 நாட்கள் வரை கண்கானித்து அவர்களின் நடவடிக்கைகளை ஆராய்ந்துள்ளார். பின்னர் இது அவர்களின் 15 வயதில் தொடரப்பட்டது. அப்போது அவர்களின் பழக்க வழக்கம், அதில் ஏற்படும் மாற்றங்கள் என அனைத்தும் சேகரிக்கப்பட்டது. இந்த ஆய்வு அவர்களின் 24 வயது வரை தொடரப்பட்டது.

இந்த ஆய்வின் முடிவுகள் ஆய்வில் பங்குபெற்றோர் மட்டுமின்றி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. குழந்தைகளின் பழக்க வழக்கங்களை ஆராய்ந்ததில், எந்த செயலிலும் விருப்பம் காட்டாமல், எந்த செயலும் செய்யாமல் அமைதியாக இருக்கும் குழந்தைகளுக்கு மாரடைப்பு, ஸ்ட்ரோக்ஸ் போன்ற நோயின் அபாயம் அதிகம் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. 11 வயதில் குழந்தைகளின் அசமந்த நிலை சராசரியாக 363 நிமிடங்களாக கணக்கிடப்பட்ட நிலையில், 15 வயதில் 472 நிமிடங்களாகவும், அதே நிமிடங்கள் 24 வயதில் 531 நிமிடங்களாக சராசரியாக 169 நிமிடங்கள் அதாவது 2.8 மணி நேர கணக்கில் உயர்ந்துள்ளது.

இந்த அசமந்த நிலை, குழந்தைகளுக்கு சீறிய பக்க விளைவுகளாக இதயம் பலவீனம், மாரடைப்பு, ஸ்ட்ரோக்ஸ் போன்ற நோய்கள் ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதனால் குழந்தைகளை பெற்றோர்கள் ஏதேனும் ஒரு முயற்ச்சியில் ஈடுபடுத்துவதற்கு உதவ வேண்டும் என்றும் கணினி, மொபைலில் அதிகளவில் மூழ்காதிருக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என ஆராய்ச்சியாளர் ஆண்ட்ரூ அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் குழந்தைகளின் அசமந்ததிற்கு முதன்மை காரணம் என பார்த்தால், ஆண்ட்ராய்டில் அவர்கள் மூழ்கியிருப்பதே என ஆய்வாளர் தெரிவித்துள்ளார். தற்போது பெருகிவரும் தொழில் நுட்ப வளர்ச்சிகளில் முன்னெடுத்துச் செல்லக்கூடிய அதீத சக்தியாக உருவெடுத்துள்ளது தொலைபேசியின் பயன்பாடு. ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் ஆண்டராய்டு மொபைலின் வளர்ச்சி, குறுகிய காலத்தில் அபரிமிதமானதாகப் பார்க்கப்படுகிறது.

கல்வி, விளையாட்டு, உணவு, சுகாதாரம், மனிதவாழ்வு, என அனைத்திற்கும் தொலைபேசியின் துணையை நாடும் அளவிற்கு, ஆண்ட்ராய்டு தன் வீரியத்தை மனித இயல்பில் நிறைவு செய்துள்ளது. அதிலும் இந்த பயன்பாடு, இன்றைய இளந்தலைமுறையினரிடம் அதிகளவில் பார்க்கப்படுகிறது. இதற்கு உதாரணமாக நம் அன்றாட வாழ்க்கை முறையை உற்று நோக்கினாலே ஆண்ட்ராய்டின் ஆட்டம் தெளிவுபட்டுவிடும்.

காலை எழுவதில் ஆரம்பித்து, இரவு உறக்கத்தில் வரும் கனவு வரை ஆண்ட்ராய்ட் மனித இயல்பினை கட்டி வைத்துள்ளது. ஏன் இன்னும் சொல்லப் போனால் சிலர் தங்களின் குழந்தைகள் அழுகையை நிறுத்துவதற்கு இதனை பயன்படுத்துகின்றனர். குழந்தை உணவு உண்பதற்கு ஆண்ட்ராய்டு, குழந்தை அமைதியாக இருப்பதற்கு ஆண்ட்ராய்டு, பொழுது போக்கு, கல்வி, ஆரோக்கியம், விளையாட்டு இப்படி எல்லா விதத்திலும் நாம் ஆண்ட்ராய்டின் பிடியிலே உள்ளோம்.

இந்த இடத்தில் ஆய்வாளர் ஆல்பர்ட் பாண்டுராவின் 'சமூகக் கற்றல் கோட்பாடு' நினைவிற்கு வருகிறது. குழந்தைகள் எதை பார்த்து வளர்கிறார்களோ அதையே பின்பற்றுகின்றனர். இந்த கோட்பாட்டின் படி குழந்தைகளின் பழக்கவழக்கம் மட்டுமின்றி, அவர்களின் உடல் ஆரோக்கியத்தையும் பாதிக்கின்றது. இந்த வழக்கத்தை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என ஆய்வாளர் தனது ஆராய்ச்சியின் மூலம் நிரூபித்துள்ளார்.

இதையும் படிங்க: கண் வலியில் இருந்து தற்காத்து கொள்ள மருத்துவர்களின் 10 சிம்பிள் டிப்ஸ்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.