ETV Bharat / bharat

ஐஎஸ்ஐஎஸ் சதி வழக்கு - கர்நாடகாவில் 9 பேர் மீது NIA கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல்!

ISIS சதி வழக்கு தொடர்பாக, குற்றம் சாட்டப்பட்டவர்கள், கர்நாடக மாநிலம் ஷிவமோகாவில் ஐஇடி குண்டுவெடிப்பை, சோதனை முறையில் நடத்தி உள்ளதாக தெரிவித்து உள்ள தேசிய புலனாய்வு முகமை கூறி உள்ளது.

nia-files-chargesheet-against-nine-in-isis-shivamogga-conspiracy-case
ஐஎஸ்ஐஎஸ் சதி வழக்கு -கர்நாடகாவில் 9 பேர் மீது NIA கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல்!
author img

By

Published : Jul 1, 2023, 7:58 PM IST

டெல்லி: கர்நாடக மாநிலம், ஷிவமோகா மாவட்டத்தில், ஐஎஸ்ஐஎஸ் சதித்திட்டம் தீட்டிய வழக்கில், 9 பேர் மீது தேசிய புலனாய்வு முகமை (NIA) முதல் துணை குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்து உள்ளது.

குற்றம்சாட்டப்பட்டவர்கள், ஷிவமோகா பகுதியில், ஐ.ஈ.டி குண்டுவெடிப்பை, சோதனை முறையில் நடத்தியதாகத் தெரிவித்து உள்ள தேசிய புலனாய்வு முகமை, மேலும் பல இடங்களில் உளவு பார்த்தது மற்றும் சொத்துகள் மற்றும் வாகனங்களை தீ வைத்து மக்கள் மத்தியில் பயத்தை பரப்பியது உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக, அந்த 9 பேர் மீது, குற்றம்சுமத்தப்பட்டு உள்ளது. இந்தியாவில் பயங்கரவாதம் மற்றும் வன்முறை மற்றும் இந்தியாவுக்கு எதிராகப் போரை நடத்துங்கள் என்று மக்களிடையே, அச்சத்தை பரப்புவதும் ஐஎஸ்ஐஎஸ் சதித்திட்டத்தின் ஒரு பகுதியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

முகமது ஷாரிக், மாஜ் முனீர் அகமது, சையத் யாசின், ரீஷான் தாஜுதீன் ஷேக், ஹுசைர் ஃபர்ஹான் பெய்க், மாஜின் அப்துல் ரஹ்மான், நதீம் அகமது கே ஏ, ஜபியுல்லா மற்றும் நதீம் பைசல் உள்ளிட்டோர் குற்றவாளிகள் என அடையாளம் காணப்பட்டு உள்ளனர்.இவர்கள் அனைவரும் கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆவர். இவர்கள் மீது ஐபிசி மற்றும் கேஎஸ் அழித்தல் மற்றும் சொத்து இழப்பு தடுப்புச் சட்டம், 1981 இன் கீழ் UA(P) சட்டம் 1967 பிரிவின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டு உள்ளதாக, தேசிய புலனாய்வு முகமை தெரிவித்து உள்ளது.

இவர்களில், மாஜ் முனீர் அகமது மற்றும் சையத் யாசின் மீது, கடந்த மார்ச் மாதமே, மற்ற குற்றப் பிரிவுகளில், குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உள்ள 9 பேரில், மாஜ் முனீர் அகமது, சையத் யாசின், ரீஷான் தாஜுதீன் ஷேக், மாஜின் அப்துல் ரஹ்மான் மற்றும் நதீம் அகமது கே ஏ உள்ளிட்டோர் எலெக்ட்ரிகல் மற்றும் மெக்கானிக்கல் பிரிவுகளில் இஞ்ஜினியரிங் படிப்பை முடித்தவர்கள் ஆவர். இந்தியாவில், ஐஎஸ் அமைப்பை வலுப்படுத்தும் நோக்கிலும், எதிர்காலத்தில் பயங்கரவாதத் தாக்குதல்களைச் செயல்படுத்தும் திறன்களைப் பெறுவதற்காக, ரோபாட்டிக்ஸ் படிப்புகளைத் தொடர ஒரு வெளிநாட்டு ஐஎஸ்ஐஎஸ் பிரமுகர் ஒருவரால், அவர்கள் நியமனம் செய்யப்பட்டு இருந்தனர்.

முகமது ஷாரிக், மாஜ் முனீர் அகமது மற்றும் சையத் யாசின் ஆகியோர், வெளிநாட்டில் உள்ள ஐஎஸ் செயல்பாட்டாளர்களுடன் இணைந்து, இந்தியாவில் ஐஎஸ் இயக்கத்தின் வழிகாட்டுதலின் பேரில் பயங்கரவாதம் மற்றும் வன்முறையை ஊக்குவிக்க குற்றவியல் சதித்திட்டம் தீட்டியதாக என்ஐஏ விசாரணையில் தெரியவந்து உள்ளது. நாட்டின் தேசிய பாதுகாப்பு, ஒற்றுமை மற்றும் இறையாண்மையை சீர்குலைக்கும் நோக்கத்துடன் மூவரும் தீவிரமாக தீவிரவாதிகளை இணைந்து செயல்பட்டதாக, தேசிய புலனாய்வு முகமை, குற்றம் சாட்டி உள்ளது.

"இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு, கிரிப்டோகரன்ஸிகள் மூலம் நிதியுதவி அளிக்கப்பட்டு உள்ளதாக, (RC-46/2022/NIA/DLI) விசாரணையில் தெரிய வந்துள்ளதாக, தேசிய புலனாய்வு முகமை தெரிவித்து உள்ளது. இந்த வழக்கு, கடந்த 2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 19ஆம் தேதி, ஊரக காவல்துறை பதிவு செய்திருந்த நிலையில், இரண்டு மாத கால இடைவெளியில், அதாவது 2022, நவம்பர் 15ஆம் தேதி, தேசிய புலனாய்வு முகமையின் வசம் வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பொது சிவில் சட்ட வரைவு மசோதா தயார் - விரைவில் தாக்கல் : உத்தரகாண்ட் முதலமைச்சர் தாமி அறிவிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.