ETV Bharat / bharat

நீரஜ் சோப்ரா பெற்றோரின் முதல் விமானப் பயணம்: கனவை நனவாக்கிய தங்க மகன்!

தன் பெற்றோரை முதன்முதலாக விமானத்தில் அழைத்துச் சென்றுள்ள நீரஜ் சோப்ரா, தன் சிறு கனவு நனவாகியுள்ளதாக ட்விட்டரில் மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

நீரஜ் சோப்ரா
நீரஜ் சோப்ரா
author img

By

Published : Sep 11, 2021, 1:36 PM IST

ஹரியானா மாநிலம், பானிபட் நகரத்தில் பிறந்த விவசாயியின் மகனாக நீரஜ் சோப்ரா, நடந்து முடிந்த டோக்கியோ 2020 ஒலிம்பிக் தொடரில், தடகளப் பிரிவின் ஈட்டி எறிதல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்தார்.

23 வயதான நீரஜ் சோப்ரா, இந்தியாவுக்கு தடகளத்தில் முதல் பதக்கத்தை பெற்றுத் தந்துள்ளார். அவர் தங்கம் வென்ற தருணத்தை, டோக்கியோ ஒலிம்பிக் தடகளத்தின் சிறந்த 10 தருணங்களுள் ஒன்றாக உலக தடகள அமைப்பு அறிவித்துள்ளது.

நீரஜ் சோப்ரா
நீரஜ் சோப்ரா பெற்றோரின் முதல் விமானப் பயணம்

மேலும், நீரஜ் சோப்ரா, தங்கம் வென்ற தினமான ஆகஸ்ட் 7ஆம் தேதியை தேசிய ஈட்டி எறிதல் தினமாக இந்திய தடகள கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

  • A small dream of mine came true today as I was able to take my parents on their first flight.

    आज जिंदगी का एक सपना पूरा हुआ जब अपने मां - पापा को पहली बार फ्लाइट पर बैठा पाया। सभी की दुआ और आशिर्वाद के लिए हमेशा आभारी रहूंगा 🙏🏽 pic.twitter.com/Kmn5iRhvUf

    — Neeraj Chopra (@Neeraj_chopra1) September 11, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இந்நிலையில், தன் பெற்றோரை முதன்முதலாக விமானத்தில் அழைத்துச் சென்று தன் பெற்றோரின் ஆசையை நிறைவேற்றியுள்ளார் நீரஜ். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள அவர், ”எனது பெற்றோரை விமானத்தில் அழைத்துச் சென்றதன் மூலம் என் சிறு கனவு இன்று நிறைவேறியுள்ளது” எனப் பகிர்ந்துள்ளார்.

இதையும் படிங்க: தங்க மகன் நீரஜ் சோப்ராவை தங்கத்தால் வடித்த சிற்பி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.