ETV Bharat / bharat

உத்தவ் தாக்கரே தரப்பின் முக்கிய பிரமுகர் ஆளும் கட்சியில் இணைந்தார்! - what is UBT shiv sena

உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவின் முக்கிய பிரமுகர் நேற்று ஆளும் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jul 8, 2023, 7:13 AM IST

மும்பை: மகாராஷ்டிரா சட்டப்பேரவையின் துணைத் தலைவரும், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவின் மூத்த முக்கிய தலைவருமான நீலம் கோர்கே நேற்று (ஜூலை 7) ஆளும் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். தற்போது சிவசேனா - பாஜக - தேசியவாத காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி மகாராஷ்டிராவில் நடைபெற்று வருகிறது.

எனவே, ஏக்நாத் ஷிண்டே முதலமைச்சராகவும், அஜித் பவார் துணை முதலமைச்சராகவும் உள்ள கூட்டணி ஆட்சியில் நீலம் கோர்கே இணைந்து உள்ளார். மேலும், நீலம் கோர்கே ஷிண்டேவின் அணியில் மூன்றாவதாக இணையும் சிவசேனா சட்டமன்ற உறுப்பினர் ஆவார்.

இது தொடர்பாக நீலம் கோர்கே கூறுகையில், “ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா சரியான பாதையில் செல்கிறது. மாநிலத்தில் பெண்களின் பிரச்னைகள், மாநிலம் மற்றும் நாட்டின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு ஷிண்டே தலைமையிலான சிவசேனாவில் இணைவதற்கு நான் முடிவெடுத்தேன்” என தெரிவித்தார்.

அதேநேரம், சிவசேனாவில் நீலம் கோர்கே இணைந்தது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முன்னேற்றமாக கருதுவதாக ஏக்நாத் ஷிண்டே தெரிவித்து உள்ளார். மறுபுறம், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா எம்பி விநாயக் ராவுத், உத்தவ் தாக்கரேவிடம் ஆதரவைப் பெற்றவர்கள் தனக்கும், சிவசேனாவுக்கும் துரோகம் இழைத்து உள்ளனர் என விமர்சித்து உள்ளார்.

அதேபோல், உத்தவ் தாக்கரே உடன் லட்சக்கணக்கான தொண்டர்கள் உள்ளனர் என உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவின் முக்கிய தலைவர் அனில் பராப் கூறி உள்ளார். மேலும், இது போன்ற சந்தர்ப்பவாதிகளை நாங்கள் ஒரு பொருட்டாக நினைப்பதில்லை என்றும் அனில் பராப் தெரிவித்து உள்ளார்.

முன்னதாக கடந்த ஜூலை 2ஆம் தேதி, மகாராஷ்டிராவின் எதிர்கட்சித் தலைவராக இருந்த அஜித் பவார், அப்போது மகாராஷ்டிராவில் இருந்த ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா - பாஜக அரசில் அஜித் பவார் தன்னை இணைத்துக் கொண்டார். அது மட்டுமல்லாது, தன்னோடு 30 சட்டமன்ற உறுப்பினர்களையும் மகாராஷ்டிரா அரசில் அஜித் பவார் இணைத்தார்.

இதனையடுத்து, மகாராஷ்டிராவின் துணை முதலமைச்சராக அஜித் பவார் பதவி ஏற்றுக் கொண்டார். அது மட்டுமல்லாமல், அஜித் பவார் தலைமையில் இணைந்தவர்களில் 9 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டது. ஏற்கனவே, உத்தவ் தாக்கரே உடன் இருந்த ஏக்நாத் ஷிண்டே தனித்து வந்து ஆட்சியைப் பிடித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: மகாராஷ்டிராவில் ட்ரிபிள் என்ஜின் ஆட்சி... முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே கருத்து!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.