ETV Bharat / bharat

சுஷாந்த் சிங் மரண வழக்கு: மேலும் இருவர் கைது! - மேலாளர் ரஹிலா ஃபர்னிச்சர்வாலா கைது

சுஷாந்த் சிங் மரணம் தொடர்பான வழக்கில், மேலாளர் ரஹிலா ஃபர்னிச்சர்வாலா, தொழிலதிபர் கரண் சஜ்னானி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.

சுஷாந்த்
சுஷாந்த்
author img

By

Published : Feb 5, 2021, 3:47 PM IST

கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதியன்று மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள குடியிருப்பு ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் நடிகர் சுஷாந்த் சிங்கின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

சுஷாந்தின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறிய அவரது தந்தை கே.கே.சிங்கின் புகாரை ஏற்று உச்ச நீதிமன்றம் மத்திய குற்றப்புலனாய்வுத் துறையின் வசம் வழக்கை ஒப்படைக்க உத்தரவிட்டது. தற்போது அந்த வழக்கு விசாரணையை சி.பி.ஐ. அலுவலர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், சுஷாந்த் மரணம் தொடர்பான வழக்கில், பிரபல மேலாளர் ரஹிலா ஃபர்னிச்சர்வாலா, தொழிலதிபர் கரண் சஜ்னானி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.

இவர்கள் இருவரும் ஏற்கனவே போதைப்பொருள் வழக்கு தொடர்பாக நீதிமன்ற காவலில் இருந்து வருகின்றனர். தற்போது, விசாரணைக்காக என்சிபி அலுவலகத்திற்கு அழைப்பு வரப்பட்டுள்ளனர். சுஷாந்த மரணத்தில் இருவருக்கும் நிச்சயம் தொடர்பு இருக்கும் என என்சிபி அலுவலர்கள் கருதுகின்றனர்.

இதுமட்டுமின்றி, மேலும் ஒருவரை என்சிபி அலுவலர்கள் கைது செய்து விசாரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.