இது குறித்து போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலர் சமீர் வான்கடே கூறுகையில், "புத்தாண்டையொட்டி அந்தேரி மற்றும் குர்லா பகுதிகளில் நேற்று ரோந்து பணியில் அலுவலர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமான மூன்று பேரை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர்கள் மெபெட்ரோன் (எம்.டி) என்ற போதை பொருள் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் மூன்று பேரையும் கைது செய்து விசாரணை நடந்துவருகிறோம்' என்றார்.
போதைப்பொருள் தடுப்பு பிரிவு கடந்த சில மாதங்களாக மும்பையில் பல போதை பொருள் விற்பனையாளர்களை கைது செய்துள்ளது. மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் வழக்கில் தொடங்கிய, போதைப்பொருள் மோசடி தொடர்பான விசாரணை, தொடரந்து நடந்து வருகிறது. போதைப்பொருள் தடுப்பு பிரிவு (Narcotics Control Bureau (NCB)) குழுவின் மும்பை அலுவலகத்தில், தீபிகா படுகோன், சாரா அலி கான் மற்றும் ஷ்ரத்தா கபூர் போன்ற பாலிவுட் பிரபலங்கள் விசாரிக்கப்பட்டனர்.
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் மரணத்தில் போதைப்பொருள் பயன்பாடு குறித்த தகவல் வெளியான பிறகு நாடு முழுவதும், போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக நாட்டின் அனைத்து பகுதிகளிலும் அடிக்கடி கைது நடவடிக்கைகள் அரங்கேறி வருவது குறிப்பிடத்தக்கது.