ETV Bharat / bharat

பாஜக பிரமுகர் நக்சலைட்டுகளால் வெட்டிக் கொலை - குடும்பத்தினர் கண்முன்னே நடந்த கோரம்!

author img

By

Published : Feb 5, 2023, 8:50 PM IST

சத்தீஸ்கரில் பட்டப்பகலில் குடும்பத்தினர் கண்முன்னே பாஜக பிரமுகர் நக்சலைட்டுகளால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

BJP
BJP

பிஜப்பூர்: சத்தீஸ்கர் மாநிலம், பிஜப்பூர் மாவட்டத்தில் உசூர் மண்டல பாஜக தலைவராக இருந்தவர், நீலகண்ட கக்கேம். இவர் கடந்த 15 ஆண்டுகளாக இந்தப் பதவியில் இருந்ததாக தெரிகிறது. இந்த நிலையில், நீலகண்ட கக்கேம் தனது உறவினரின் திருமணத்திற்காக இன்று(பிப்.5) தன்னுடைய சொந்த கிராமமான ஆவப்பள்ளிக்குச் சென்றிருந்தார்.

அப்போது, திடீரென நக்சலைட்டுகள் நீலகண்ட கக்கேம் வீட்டிற்கு வந்தனர். அவரது குடும்பத்தினர் சூழ்ந்திருந்தபோதும், அவரை வீட்டை விட்டு வெளியே இழுத்துச் சென்று வெட்டிக் கொலை செய்தனர். இதில் சம்பவ இடத்திலேயே கக்கேம் உயிரிழந்துவிட்டார்.

இதையடுத்து கொலைக்கு தாங்கள் பொறுப்பேற்பது தொடர்பாக, நக்சலைட்டுகள் துண்டு பிரசுரங்களை அப்பகுதியில் வீசிவிட்டு சென்றனர். இந்த கொலையைக் கண்ட கக்கேமின் குடும்பத்தினர் கதறி அழுதனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பட்டப்பகலில் பலரது கண் முன்னே நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதேபோல், பிஜப்பூரில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பாஜக தலைவர் மஜ்ஜி நக்சலைட்டுகளால் கொல்லப்பட்டார். முன்னதாக பாஜகவின் இளைஞரணி தலைவர் ஜெகதீஷ் கோந்த்ராவும் நக்சலைட்டுகளால் கொல்லப்பட்டார். நீலகண்ட கக்கேம் கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:Bitcoin Scam: ஃபேஸ்புக்கில் பிட்காய்னுக்கு ரூ.12 லட்சம் விளம்பர மோசடி..அதிரடி காட்டிய சைபர் குற்றப்பிரிவு

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.