ETV Bharat / bharat

பர்மாவில் நடைபெற்ற நாகூர் ஆண்டவர் கந்தூரி விழா - செயின்சோன்

பர்மாவின் செயின்சோன் தீவீல் உள்ள நாகூர் தர்காவில் கொடி ஏற்றப்பட்டு, சந்தனம் பூசும் வைபவம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

பர்மாவில் நடைபெற்ற நாகூர் ஆண்டவர் கந்தூரி விழா

author img

By

Published : Jan 21, 2023, 10:11 PM IST

பர்மாவில் நடைபெற்ற நாகூர் ஆண்டவர் கந்தூரி விழா

நாகப்பட்டிணம் மாவட்டம் நாகூர் ஆண்டவர் என போற்றப்படும் செய்யது சாகுல் ஹமீது பாதுஷாவின் நினைவு தினம் ஒவ்வொரு ஆண்டும் கந்தூரி விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவில் வருடம் தோறும் பர்மா மக்களால் கைகளால் எம்பிராய்டிங் செய்யப்பட்ட பச்சைக்கொடி பெரிய மினராவில் புனித கொடி ஏற்றப்படும்.

அதேபோல இந்த ஆண்டும் விமானம் மூலம் பர்மாவிலிருந்து கொடி நாகூர் கொண்டு வரப்பட்டு நாகூர் ஆண்டவரின் பேரப்பிள்ளையான ஷூஃபி கலிஃபா சாகுல் ஹமீது சாஹிப்பால் பாத்திஹா ஓத பட்டு, பர்மா மக்களின் சார்பாக நாகூர் தர்கா பெரிய மினோராவில் கொடி ஏற்றப்பட்டது.

இதையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு பர்மா மக்களின் சார்பாக அன்னதானமும் வழங்கப்பட்டது. இந்த பிரத்யேக சிறப்பு கொடியை பர்மா நாட்டில் இருந்து ஹாஜி உசேன், ஹாஜி ரஃபி, ஹாஜிமா நசீமா ஆகியோர் பர்மா மக்களின் சார்பாக இந்த கொடியை நாகூர் தர்காவுக்கு எடுத்து ஏற்றிவிட்டு, அதே கொடியை பர்மாவுக்கு எடுத்துச் சென்று அங்கு மோல்மேன் தீவில் அடக்கமாக இருக்கும் நாகூர் ஆண்டவர் தர்காவில் பிரார்த்தனையுடன் ஏற்றப்பட்டது.

அதை ஒட்டி பர்மா செயின்சோன் தீவில் அமைந்திருக்கும் நாகூர் தர்காவில் கந்தூரி ஊர்வலம் மற்றும் சந்தனம் பூசும் வைபவம் நடைபெற்றது. இதில் நாகூர் ஆண்டவரின் பேரப்பிள்ளை ஷூஃபி கலிஃபா சாகுல் ஹமீது சாஹிப், கொடிமரம் மற்றும் சமாதியில் சந்தனம் பூசினார்.

இந்தப் புகழ் பெற்ற சந்தனம் பூசும் வைபவத்தில் பர்மா வாழ் மக்களும், இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பக்தர்களும் லட்சக்கணக்கில் கலந்துகொண்டனர். மேலும் அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படாத வண்ணம் அந்நாட்டு ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்த செயின்சோன் தீவீல் இருந்துதான் முதல் முதலாக இந்தியாவில் உள்ள நாகூர் ஆண்டவர் சமாதிக்கு சந்தன மரங்களை அந்நாட்டு ராஜா அனுப்பி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தரை தட்டியதா கங்கா விலாஸ்?.. கப்பலுக்குள் முடங்கிய சுற்றுலா பயணிகள்..

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.