புல்வாமா பயங்கரவாத தாக்குதலின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. 2019ஆம் ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதி அன்று மத்திய ரிசர்வ் படை வீரர்களின் கான்வாய் மீது மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதில் 40 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.
இந்த கோர நிகழ்வின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் என்பதால் பல்வேறு தலைவர்கள் தங்கள் அஞ்சலியை செலுத்தி வருகின்றனர். பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா அவருடைய ட்விட்டர் பக்கத்தில், இந்தியாவின் வீர புதல்வர்களுக்கு எனது மரியாதை. அவர்களுக்கு தேசம் என்று நன்றிக்கடன் பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
அதேபோல், ராகுல் காந்தி ட்விட்டர் பக்கத்தில், புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு எனது அஞ்சலி, அவர்களின் குடும்பத்தினருக்கு தேசம் கடன் பெற்றுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா, மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சௌஹான் ஆகியோரும் தங்கள் அஞ்சலியை தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: 27 கோடி ஏழை மக்களுக்கு இலவச கோவிட்-19 தடுப்பூசி: ஐ.எம்.ஏ வலியுறுத்தல்!