மைசூரு (கர்நாடகா): கடந்த 1937ஆம் ஆண்டு மைசூர் வம்சத்தின் நல்வாடி கிருஷ்ணராஜ உடையார் என்பவரால், ‘மைசூரு லாக் பேக்டரி’ (Mysore Lac Factory) என்ற பெயரில் வண்ணப்பூச்சு தயாரிக்கும் தொழிற்சாலை தொடங்கப்பட்டுள்ளது. பின்னர் 1947ஆம் ஆண்டு மைசூரு பெயிண்ட்ஸ் மற்றும் வார்னிஷ் லிமிடெட் என்ற பெயர் மாற்றப்பட்டு, தற்போது வரை இதே பெயரில் தொழிற்சாலை இயங்கி வருகிறது.
இங்கு தயாரிக்கப்படும் மெழுகுடன் கூடிய பெயிண்ட்தான், 1962க்குப் பிறகு நாட்டில் நடைபெறும் அனைத்து பொதுத் தேர்தல்களிலும் மை வடிவில் வாக்களித்த வாக்காளர்களின் விரல்களில் வைக்கப்படுகிறது. எனவே இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் அனைத்து மாநில தேர்தல் ஆணையம் ஆகியவை இந்த நிறுவனத்திடம் இருந்துதான் மை வாங்குகின்றன.
மேலும் இதன் பிற தயாரிப்புகளான கலவை பெயிண்ட்ஸ்கள், பார்ட் எர்த் மூவர்ஸ் லிமிடெட், பார்ட் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட், தென்மேற்கு ரயில்வே, மைசூரு மத்திய உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனம், மைசூர் மத்திய பட்டுப்புழு ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், மாநில சாலைப் போக்குவரத்துக் கழகம்,
கர்நாடகா பவர் டிரான்ஸ்மிஷன் கார்ப்பரேஷன், ஹட்டி தங்கச் சுரங்கங்கள், தமிழ்நாடு பொது நிறுவனங்கள், கார்ப்பரேஷன்கள் மற்றும் ஜே.கே.டயர்ஸ், ஆட்டோமோட்டிவ் ஆக்சில்ஸ் போன்ற நிறுவனங்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த நிலையில் மைசூரு பெயிண்ட்ஸ் மற்றும் வார்னிஷ் லிமிடெட் நிறுவனம், தற்போது தனது 75வது ஆண்டு விழாவான பவள விழாவை கொண்டாடுகிறது.
இதையும் படிங்க: குஜராத் தேர்தல்: நாட்டில் பயங்கரவாத எதிர்ப்பு குழு அமைக்கப்படும் - பாஜக வாக்குறுதி