டாமோக்: மத்திய பிரதேச மாநிலம் டாமோக் பகுதியைச் சேர்ந்தவர் சுரேந்திரா சிங். சிறப்பு ஆயுதப் படை பிரிவில் காவலராக பணியாற்றி வந்தார். சம்பவத்தன்று காவல் நிலையத்தின் முன் இளைஞர்கள் சிலர் பயங்கர சத்தத்துடன் சண்டையிட்டுள்ளனர்.
காவல் நிலையத்தினுள் சாப்பிட்டுக் கொண்டு இருந்த சுரேந்திரா சிங், சத்தம் கேட்டு வெளியே வந்து, தகராறில் ஈடுபட்ட இளைஞர்களை தட்டிக் கேட்டுள்ளார். இதில் இளைஞர்களுக்கும், சுரேந்திரா சிங்கிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு மூண்டதாக கூறப்படுகிறது.
இளைஞர்கள் கீழே கிடந்த கற்களை எடுத்து சுரேந்திரா மீது திடீர் தாக்குதல் நடத்தினர். தாக்குதலை சற்றும் எதிர்பாராத காவலர் சுரேந்திரா சிங் நிலை குழைந்து கீழே சரிந்தார். தலையில் ஏற்பட்ட பலத்த காயத்தால் அதிகளவில் ரத்தம் வெளியேறி சாலையிலே சுரேந்திரா சிங் மயக்கமடைந்ததாக கூறப்படுகிறது.
சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்த நிலையில், ரத்த வெள்ளத்தில் மிதந்த காவலரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர். மருத்துவமனையில் காவலரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர்.
காவலர் கொலைச் செய்யப்பட் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்ட நிலையில், சிசிடிவி காட்சிகளை கொண்டு காவலர் சுரேந்திரா சிங்கை கற்களால் தாக்கி கொலை செய்த இளைஞர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: Tunisha Sharma: பிரபல நடிகை துனிஷா சர்மா தற்கொலை!