ETV Bharat / bharat

"ரமோன் மகசேசே" விருது பெற்ற புற்றுநோயியல் நிபுணர் டாக்டர் ரவி கண்ணனுக்கு எம்.பி கனிமொழி வாழ்த்து!

MP Kanimozhi Congratulates: பிலிப்பைன்ஸ் அதிபர் ரமோன் மகசேசேயின் நினைவாக ஆண்டுதோறும் ரமோன் மகசேசே விருது வழங்கப்படுகிறது. இந்த விருதினை பெரும் ஒரே இந்தியர் என்ற பெருமையை டாக்டர் ரவி கண்ணன் பெற்றுள்ளார்.

"ரமோன் மகசேசே" விருது பெற்ற புற்றுநோயியல் நிபுணர் டாக்டர் ரவி கண்ணனுக்கு எம்.பி கனிமொழி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
mp-kanimozhi-congratulates-ramon-magsaysay-awardee-oncologist-dr-ravi-kannan
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 2, 2023, 11:54 AM IST

Updated : Sep 2, 2023, 12:35 PM IST

சென்னை (தமிழ்நாடு): ரமோன் மகசேசே விருது பெற்ற புற்றுநோய் நிபுணர் டாக்டர் ரவி கண்ணனுக்கு தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ட்விட்டர் பதிவு முலம் இன்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.

  • Congratulations to Dr. Ravi Kannan from Tamil Nadu for being honoured with the Ramon Magsaysay Award 2023. His dedication to cancer care as a Surgical Oncologist at the Adyar Cancer Institute and his role as Director at CCHRC for the people of the North East has been recognised… pic.twitter.com/zDh6tpM4LA

    — Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) September 1, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

தமிழ்நாட்டை சேர்ந்து டாக்டர் ரவி கண்ணன், 2023ஆம் ஆண்டிற்கான ரமோன் மகசேசே விருது பெற்றதற்கு தமிழ்நாடு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகளும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி பாராட்டுகளை தெரிவித்துள்ளார். மேலும் வரும் காலங்களிலும் சமூகத்தின் நல்வாழ்வுக்கு அவரின் பங்களிப்பை வழங்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

பிலிப்பைன்ஸ் அதிபர் ரமோன் மகசேசேயின் நினைவாக ஆண்டுதோறும் ரமோன் மகசேசே விருது வழங்கப்படுகிறது. இந்த விருதினை பெரும் ஒரே இந்தியர் என்ற பெருமையை டாக்டர் ரவி கண்ணன் பெற்றுள்ளார். இந்த ரமோன் மகசேசே விருது முதன் முதலாக ஏப்ரல் 1957ல் வழங்கப்பட்டது. அதன்பின் வருடம் தோறும் இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது. ஆசியாவின் நோபல் பரிசு என்று ரமோன் மகசேசே விருது அழைக்கப்படுகிறது. இந்த விருது ஒருமைப்பாடு துணிச்சல் மற்றும் தன்னலமற்ற சேவை ஆகியவைகளுக்காக தனி நபர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: World Vulture Awareness Day : பறவைகளின் அரசன் "பாறு கழுகு"... அழிவில் இருந்து மீளுமா! அழிவிற்கு என்ன காரணம்?

டாக்டர் ரவி கண்ணன் புற்றுநோய் சிகிச்சைத் துறையில் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளார். இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் இவரின் பங்களிப்பு மிக முக்கியமானது. இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் புற்றுநோய்களால் அதிகமானவர் பாதிக்கப்பட்டு இறப்பு எண்ணிக்கை அதிகமாக இருந்தது. இதனால் இந்த வடகிழக்கு மாநிலங்களில் புற்றுநோயை எதிர்த்து போராடி பல்வேறு சவால்களை எதிர்கொண்டுள்ளார். புற்றுநோயாளிகளினால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப பொருளாதார நிலை மற்றும் உணர்ச்சிகளை வைத்து அவர்களுக்கான சேவையை பல்வேறு சாவல்களை எதிர் கொண்டு செய்துள்ளார்.

அசாம் மாநிலத்தில் கச்சார் மாவட்டம் உள்ளது. இங்கு முதல் புற்றுநோய் மருத்துவமனை 1981ல் திறக்கப்பட்டாலும் 1996ல் தான் தன்னார்வ தொண்டு நிறுவனம் முலம் கச்சார் புற்றுநோய் மருத்துவமனையில் ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட்டது. மேலும் டாக்டர் ரவி கண்ணனின் திறமையான தலைமையில் கச்சார் புற்றுநோய் மருத்துவமனை விரிவான புற்றுநோய் சிகிச்கை மருத்துவமனையாக மாறியது. 2007ஆம் ஆண்டு முதல் டாக்டர் ரவி கண்ணன் மருத்துவமனையின் இயக்குநராக பதவி ஏற்றப்பின்பு அவரின் தொலைநோக்கு சிந்தனை மற்றும் திறன்களை கொண்டு மருத்துவமனையின் மருத்துவ முறையை மேம்படுத்த உதவி புரிந்துள்ளார்.

இதையும் படிங்க: Aditya-L1: சூரியனையும் தொட்டுவிடலாம்.. ஆதவனை ஆராயும் ஆதித்யா எல்1 விண்கலம்! இஸ்ரோ ரெடி!

Last Updated : Sep 2, 2023, 12:35 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.