ETV Bharat / bharat

மருத்துவக் கல்வியை தொடர்ந்து பொறியியல் கல்வியும் இந்தியில் தொடங்கும் - அமித் ஷா

author img

By

Published : Oct 17, 2022, 8:09 AM IST

இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், குஜராத்தி, பெங்காலி போன்ற பிராந்திய மொழிகளில் மருத்துவம் மற்றும் பொறியியல் கல்வியை வழங்க பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்தாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.

Etv Bharatமத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை திட்டம் - இந்தியில் பாடப் புத்தகங்களை வெளியிட்ட அமித் ஷா

போபால்: மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் நாட்டிலேயே முதல் முறையாக எம்பிபிஎஸ் படிப்பை இந்தியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் கலந்து கொண்டனர். அந்த நிகழ்வில் உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறுகையில், "அமிர்தப்பெருவிழா ஆண்டில் மருத்துவத் துறைக்கு இந்த நாள் மிகவும் முக்கியமானது. நாட்டின் கல்வித்துறையின் மறுமலர்ச்சி மற்றும் மறுசீரமைப்பு நாள் இது.

தொழில்நுட்பம் மற்றும் மருத்துவக் கல்வியில் மாணவர்களின் தாய்மொழிக்கு முக்கியத்துவம் அளித்து, புதிய கல்விக் கொள்கையில் மிகவும் வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை பிரதமர் நரேந்திர மோடி எடுத்துள்ளார். இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், குஜராத்தி, பெங்காலி போன்ற பிராந்திய மொழிகளில் மருத்துவம் மற்றும் பொறியியல் கல்வியை வழங்க பிரதமர் நரேந்திர மோடி மாநிலங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். முதலாவதாக சிவ்ராஜ் சிங் சவுஹானின் தலைமையிலான மத்தியப் பிரதேச அரசு, மோடியின் விருப்பத்தை நிறைவேற்றியுள்ளது.

இன்று மருத்துவக் கல்வி இந்தியில் தொடங்கும் நிலையில், விரைவில் பொறியியல் படிப்புகளும் இந்தியில் தொடங்கும். நாடு முழுவதும் எட்டு மொழிகளில் பொறியியல் புத்தகங்கள் மொழி பெயர்ப்பு தொடங்கப்பட்டுள்ளது. விரைவில் நாடு முழுவதும் உள்ள மாணவர்கள் தங்கள் தாய் மொழிகளில் தொழில்நுட்பம் மற்றும் மருத்துவக் கல்வியைத் தொடர முடியும். மாணவர்கள் தொழில்நுட்பம் மற்றும் மருத்துவக் கல்விக்கான வழிமுறைகளை அவர்களின் தாய்மொழியில் பெறுவது மட்டுமல்லாமல், அவர்களின் சொந்த மொழியில் ஆய்வுகளை மேற்கொள்ள முடியும்.

2014ஆம் ஆண்டில் நாட்டில் 387 மருத்துவக் கல்லூரிகள் மட்டுமே இருந்தன. இன்று இவை 596ஆக உயர்ந்துள்ளன. அதேபோல எம்எம்பிஎஸ் இடங்களின் எண்ணிக்கை 51,000-லிருந்து 79,000ஆக உயர்ந்துள்ளது. 16 ஐஐடிகள் 23 ஆகவும், 13 ஐஐஎம்கள் 20 ஆகவும், 9 ஐஐஐடிகள் 25 ஆகவும் உயந்துள்ளன. 2014 ஆம் ஆண்டில், நாட்டில் 723 பல்கலைக்கழகங்கள் இருந்தன. அவை 1,043 ஆக உயர்த்தப்பட்டுள்ளன. தாய்மொழியில் கல்வியை வழங்கினால் அது அறிவுசார் திறனை மேம்படுத்துவதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இன்றைய அறிமுகத்திற்குப் பிறகு, உலகளாவிய ஆராய்ச்சியில் இந்தியா நீண்ட தூரம் செல்லும். நமது மாணவர்களின் அறிவுத்திறன் உலகத்தின் முன் வைக்கப்படும்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க:வங்கிகள் ஏழைகளின் வீட்டு வாசலில் செல்லும் சூழ்நிலை மிகப்பெரிய மாற்றமாகும் - பிரதமர் மோடி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.