டிண்டோரி: மத்தியப் பிரதேசம், டிண்டோரி மாவட்டத்தின் ஆட்சியராக ரத்னாகர் ஜோ பணியாற்றி வருகிறார். அவர் அம்மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வினை மேற்கொண்டார்.
அப்போது மருத்துவமனை வளாகத்தில் ஒருவர் குட்காவை மென்று துப்பியுள்ளார். அதைக்கண்ட ஆட்சியர் கோபமடைந்து, குட்காவை துப்பியவரை அழைத்து, அவரை சுத்தம் செய்யும்படி பணித்தார். மேலும், இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது எனவும் அந்த நபரை ஆட்சியர் கண்டித்தார்.
பாராட்டும் கண்டனுமும்
இதை அருகில் இருந்தவர்கள் காணொலி எடுத்துள்ளனர். இந்தக் காணொலி தற்போது சமூக வலைதளங்களில் அதிகம் பரவிவருகிறது. ஆட்சியரின் இந்தச் செயலுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வந்தாலும், அந்ந நபரை வெறும் கைகளால் எச்சிலை சுத்தம் செய்யவைத்தற்கு கண்டனமும் குவிந்து வருகிறது.
குட்காவை மென்று துப்பியவர் டிண்டோரி மாவட்டத்தின் சர்ஹாி கிராமத்தைச் சேர்ந்தவர். மேலும், பொது இடத்தில் எச்சில் துப்பியதற்காக அவருக்கு சுகாதார அலுவலர்கள் சம்மன் அளித்து விளக்கம் கேட்டுள்ளனர்.
இதையும் படிங்க: இது மோடி தந்த பணம்: அடம்பிடித்ததால் மோசடி வழக்கில் சிறை சென்ற நபர்!