ETV Bharat / bharat

ம.பி: கவனிப்பாரற்றுக் கிடந்த இறந்த கரோனா நோயாளியின் உடல்! - காங்கிரஸ் எம்.எல்.ஏ சதீஷ் சிகர்வார்

குவாலியரில் கரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்த நபரின் உடல் 24 மணி நேரத்திற்கும் மேலாக மருத்துவமனை படுக்கையில் வைக்கப்பட்டிருந்த அதிர்ச்சிகர சம்பவம் அரங்கேறியுள்ளது.

கவனிப்பாரற்றுக் கிடந்த இறந்த கரோனா நோயாளியின் உடல்!

author img

By

Published : Apr 29, 2021, 9:55 AM IST

மத்தியப் பிரதேசம்: கரோனா இரண்டாவது அலை தீவிரமெடுத்துவரும் நிலையில், குவாலியரில் உள்ள மாவட்ட தலைமையக மருத்துவமனையில் நேற்று (ஏப். 28) பிற்பகல் கரோனா நோயாளி ஒருவர் இறந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

ம.பி: கவனிப்பாரற்றுக் கிடந்த இறந்த கரோனா நோயாளியின் உடல்!

மேலும், கரோனா காரணமாக இறந்த நோயாளியின் உடல் மற்ற நோயாளிகளுக்கு அருகில் உள்ள படுக்கையில் 24 மணி நேரத்திற்கும் மேலாக வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்தச் சம்பவம் குறித்து தகவல் கிடைத்த, காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் சதீஷ் சிகர்வார் மருத்துவமனை நிர்வாகத்திடம் பேசினார். அதனையடுத்து, மருத்துவமனை இறந்த கரோனா நோயாளியின் உடலை அங்கிருந்து மாற்றியது.

இதற்கிடையில், ஒரு சில ஊழியர்கள் மட்டுமே இருப்பதால் உடல் தாமதமாக அகற்றப்பட்டதாக மருத்துவமனை அலுவலர்கள் தெரிவித்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.