சீனாவிலிருந்து புதுடெல்லிக்கு ஸ்பைஸ்ஜெட் கார்கோ விமானம் மூலம் 700 ஆக்ஸிஜன் டேங்கர்கள் கொண்டு வரப்பட்டுள்ளன என்று ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் கூறியிருப்பதாவது, "அமெரிக்கா, ஹாங்காங், சிங்கப்பூர், சீனா ஆகிய நாடுகளிலிருந்து கடந்த இரண்டு வாரங்களில் ஸ்பைஸ்ஜெட் விமானம் மூலம் நான்காயிரத்து 400 ஆக்ஸிஜன் டேங்கர்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. ஏப்ரல் 24 ஆம் தேதி பி737 விமானம் மூலம் 800 ஆக்ஸிஜன் டேங்கர்களும், ஏப்ரல் 28 ஆம் தேதி ஹாங்காங்கிலிருந்து டெல்லிக்கு ஆயிரம் ஆக்ஸிஜன் டேங்கர்களும் கொண்டுவரப்பட்டுள்ளன" எனக் கூறியுள்ளது.