டெல்லி: ரஷ்யா - உக்ரைன் போர் காரணமாக, அங்கு படித்த இந்திய மருத்துவ மாணவர்கள் தாய்நாடு திரும்பினர். இவர்கள் தங்களது மருத்துவ படிப்பை நிறைவு செய்ய, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அந்த வகையில் உக்ரைன் வெளியுறவுத்துறை உடன் தேசிய மருத்துவ ஆணையம் ஆலோசித்தது. அதன்பின் இடம்பெயர் கல்வி திட்டம் குறித்த அறிவிப்பை வெளியிட்டது. அதில், உக்ரைன் நாட்டிலிருந்து திரும்பிய இந்திய மருத்துவ மாணவர்கள் தங்களது படிப்பை உலகெங்கிலும் 29 மருத்துவ கல்லூரிகளில் கல்வியை நிறைவு செய்யலாம். அதற்கான பட்டத்தை, உக்ரைனில் தாங்கள் படித்த பல்கலைக்கழகங்களிலேயே மாணவர்கள் பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவித்தது.
அந்த வகையில் போலந்து, ஆஸ்திரியா, செக் குடியரசு, பிரான்ஸ், ஜார்ஜியா, கஜகஸ்தான், லிதுவேனியா, மால்டோவா, ஸ்லோவேனியா, ஸ்பெயின், உஸ்பெகிஸ்தான், அமெரிக்கா, இத்தாலி, பெல்ஜியம், எகிப்து, பெலாரஸ், லாட்வியா, கிர்கிஸ்தான், கிரீஸ், ருமேனியா, ஸ்வீடன், இஸ்ரேல், ஈரான், அஜர்பைஜான், பல்கேரியா, ஜெர்மனி, துருக்கி, குரோஷியா, ஹங்கேரி நாடுகளில் மாணவர்கள் படிப்பை நிறைவு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவைச் சேர்ந்த 20,000 மேற்பட்ட மாணவர்கள் உக்ரைனில் மருத்துவம் படித்து வந்தனர். அதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 2,000 பேரும் அடங்கும். இவர்கள் அனைவரும் மேற்கூறிய 29 நாடுகளில் மீண்டும் தொடர உள்ளனர்.
இதையும் படிங்க: ரஷ்ய அதிபர் புதினை சிரிக்க வைத்த பாகிஸ்தான் பிரதமரின் செயல்