ETV Bharat / bharat

மும்பை 7 மாடி கட்டட தீ விபத்து; இதுவரை 7 பேர் உயிரிழப்பு - பிரதமர் மோடி நிவாரணம் அறிவிப்பு!

Mumbai Fire Accident: மும்பை கோரேகான் பகுதியில் உள்ள 7 மாடி கட்டடத்தில், இன்று (அக்.6) அதிகாலை 3 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 31 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தற்போது இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரதமர் மோடி நிவாரணம் அறிவித்துள்ளார்.

Mumbai Fire Accident
மும்பையில் உள்ள 7 மாடி கட்டடத்தில் பயங்கர தீ விபத்து
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 6, 2023, 10:31 AM IST

Updated : Oct 6, 2023, 12:46 PM IST

மும்பையில் உள்ள 7 மாடி கட்டடத்தில் பயங்கர தீ விபத்து: இதுவரை 7 பேர் பலி!

மும்பை: மும்பையில் உள்ள கோரேகான் மேற்குப் பகுதியில் உள்ள ஜெய்பவானி கட்டடத்தில் இன்று அதிகாலை சுமார் 3 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. பின்னர் இந்த தீ விபத்து குறித்து தகவல் அறிந்து, 8 வாகனங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறை வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் தற்போது வரை 7 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

  • Pained by the loss of lives due to a fire mishap in Mumbai's Goregaon. Condolences to the bereaved families. I pray that the injured recover soon. Authorities are providing all possible assistance to those affected.

    An ex-gratia of Rs. 2 lakh from PMNRF would be given to the…

    — PMO India (@PMOIndia) October 6, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

மேலும், இந்த தீ விபத்தில் சுமார் 30 வாகனங்கள் வரை எரிந்து தீக்கிரையானது. சுமார் 30 நபர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து, இந்த தீ விபத்து எப்படி ஏற்பட்டது என்பது குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். அதாவது, இந்த ஜெய் பவானி கட்டடம் ஏழு மாடிகளைக் கொண்டது ஆகும்.

தற்போது இதை 2ஆம் கட்ட தீவிபத்து எனவும், இந்த தீ விபத்து குறித்த தகவல் அறிந்ததும், உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டதாகவும் தீயணைப்புத் துறையினர் தெரிவிக்கின்றனர். மேலும், தீ விபத்தில் சிக்கிய 30க்கும் மேற்பட்ட நபர்கள் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில், 31 பேர் காயமடைந்துள்ளதாகவும், அதில் 14 பேர் படுகாயம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், அவர்களை மீட்ட தீயணைப்புத் துறையினர் உடனடியாக அருகில் இருந்த மும்பையின் ட்ராமா கேர் மற்றும் கூப்பர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, இந்த தீ விபத்துக்கு தரைதளத்தில் அமைந்திருந்த ஒரு சில கடைகளும், அதன் அருகில் நிறுத்தப்பட்டிருந்த கார்களும் எரிந்து நாசமாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தற்போது சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்த தகவலின்படி, “அதிகாலை சுமார் 3 மணியளவில், ஒரு மிகப்பெரிய குண்டு வெடித்தது போன்ற சப்தம் கேட்டது. அந்த வெடி சத்தம் கேட்டுதான் அனைவரும் விழித்தோம். பிறகு பதற்றத்தில் கீழே வந்து பார்த்தபோதுதான் தீ விபத்து ஏற்பட்டது தெரிய வந்தது. பின்னர் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்துவிட்டு, வீட்டில் இருந்த அனைவரையும் வெளியேறும்படி எச்சரிக்கை விடுத்தோம். அதற்குள் பாதி தீ பரவிவிட்டது” என தெரிவித்தனர்.

தற்போது இந்த விபத்திற்காக பிரதமர் மோடி தனது அனுதாபங்களையும், நிவாரணமும் அறிவித்துள்ளார். அதில், "மும்பை கோரேகாபில் நிகழ்ந்த தீ விபத்தில் உயிரிழப்பு ஏற்பட்டது வேதனையளிக்கிறது. மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு எனது அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன். தொடர்ந்து, தீ விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டிக் கொள்கிறேன்.

தற்போது பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் அதிகாரிகள் விரைந்து செய்து வருகின்றனர். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணத் தொகையும், விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும்" என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: இடைநிலை ஆசிரியர்கள் கைது; பேருந்தில் ஏற்றி அலைக்கழிக்க விட்டதாக போலீசார் மீது குற்றச்சாட்டு!

Last Updated : Oct 6, 2023, 12:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.