ETV Bharat / bharat

"சிறையில் அமைச்சருக்கு மசாஜ் செய்தவர் ஒரு கைதி" - அதிர்ச்சித்தகவல்! - பாஜக எம்பி மனோஜ் திவாரி

திகார் சிறையில் அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றும், அவருக்கு மசாஜ் செய்தவர் ஒரு கைதி என்றும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

Masseur
Masseur
author img

By

Published : Nov 22, 2022, 9:57 PM IST

டெல்லி: டெல்லி அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் சத்யேந்தர் ஜெயின் சொகுசு வாழ்க்கை வாழ்வதாக அமலாக்கத்துறை டெல்லி நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது. சிறையில் சத்யேந்தர் ஜெயினுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்து கொடுத்த புகாரில், திகார் சிறை கண்காணிப்பாளர் அண்மையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

இதனிடையே திகார் சிறையில் சத்யேந்தர் ஜெயினுக்கு நபர் ஒருவர் மசாஜ் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. அதில், ஜெயின் படுக்கையில் படுத்துக் கொண்டிருக்கும்போது, நபர் ஒருவர் அவருக்கு முதுகு மற்றும் காலில் மசாஜ் செய்கிறார். பின்னர், ஜெயின் தனது அறையில் படுத்துக்கொண்டே பார்வையாளர்களைச் சந்திக்கிறார். அவரது அறையில் மினரல் வாட்டர் பாட்டில்கள், நாற்காலி, ரிமோட் உள்ளிட்டவை இருப்பதையும் பார்க்க முடிகிறது.

ஆனால், சத்யேந்தர் ஜெயினுக்கு மசாஜ் செய்யப்படவில்லை என்றும், அது பிசியோதெரபி சிகிச்சை என்றும் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்திருந்தார். அவருக்கு முதுகுத்தண்டில் பிரச்னை இருப்பதாகவும், அதற்காக சிறையில் நடக்கும் பிசியோதெரபி அமர்வில்தான் இந்த சிகிச்சை அளிக்கப்பட்டது என்றும் கெஜ்ரிவால் விளக்கம் அளித்தார்.

இந்த நிலையில், சத்யேந்தர் ஜெயினுக்கு மசாஜ் செய்தவர் ரிங்கு என்ற சிறைக்கைதி என அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. சொந்த மகளை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக போக்சோ வழக்கில் கைதான ரிங்குதான் மசாஜ் செய்தார் என்றும், சிறையில் இதுபோன்ற சிகிச்சை ஏதும் அளிக்கப்படுவதில்லை என்றும் சிறைத்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

இந்தச் சம்பவம் தொடர்பாக பாஜக எம்.பி. மனோஜ் திவாரி ஆம்ஆத்மியை கடுமையாக சாடியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "வெட்கக்கேடான விஷயம். அது பிசியோதெரபி இல்லை, மேலும் திகார் சிறையில் ஜெயினுக்கு மசாஜ் செய்தவர் போக்சோவில் கைதானவர் என்பது தெரியவந்துள்ளது. கெஜ்ரிவால் கூறியது போல் அவர் பிசியோதெரபிஸ்ட் இல்லை என உறுதியாகியுள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம் டெல்லி மாநகராட்சி தேர்தல் தொடர்பான பிரச்னைகள் ஏதும் கிடைக்காததால், சிசோடியா மற்றும் சத்யேந்தர் ஜெயின் தொடர்பான விஷயங்களை பாஜக கையிலெடுத்துள்ளது என டெல்லி அமைச்சர் கோபால் ராய் குற்றம்சாட்டினார். இதுகுறித்து ராய் மேலும் கூறுகையில், "அமித் ஷா குஜராத் சிறையில் இருந்தார், அப்போது அவருக்கென்று ஒரு சிறப்பு சிறை இருந்தது. அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையை யாராலும் பெற முடியாது. அதுவும் பதிவில் உள்ளது.

தற்போது பிரச்னை ஜெயின் சிகிச்சை பெறுவது பற்றியது அல்ல. டிசம்பர் 4ஆம் தேதி டெல்லி மக்கள் பாஜகவுக்கு என்ன சிகிச்சை அளிப்பார்கள் என்பதுதான். கெஜ்ரிவாலின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதே பாஜகவின் ஒரே நோக்கம். கடந்த பத்து நாட்களாக டெல்லியில் தேர்தல் பிரசாரம் நடைபெற்று வருகிறது. தாங்கள் செய்த வேலையின் அடிப்படையில் பிரசாரம் செய்பவர்கள் ஒரு பக்கம் என்றால், பிறர் மீது சேற்றை வாரி இறைப்பதை மட்டும் செய்பவர்கள் மறுபுறம் இருக்கிறார்கள்" என்றார்.

இதையும் படிங்க: ஆம் ஆத்மி அமைச்சருக்கு ரூ.10 கோடி லஞ்சம் கொடுத்ததாக சுகேஷ் சந்திரசேகர் தகவல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.