ETV Bharat / bharat

மணிப்பூரில் சட்ட ஒழுங்கு பிரச்னை; 3662 பேர் கைது!

Manipur Security forces arrest 3 662 persons : மணிப்பூரில் சட்ட ஒழுங்கு பிரச்னையை கட்டுக்குள் கொண்டுர கடந்த 24 மணி நேரத்தில் காவல் துறையினர் மற்றும் மத்திய பாதுகாப்பு படையினர் சேர்ந்து நடத்திய அதிரடி சோதனையில் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள், ஆயுதங்கள் வைத்திருந்தவர்கள் என 3ஆயிரத்து 662 பேரை கைது செய்துள்ளனர்.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 28, 2023, 10:55 PM IST

தேஜ்பூர்: மணிப்பூரில் சட்டம் ஒழுங்கு கட்டுக்குள் இருந்தபோதிலும், மியான்மாரின் எல்லைப் பகுதிகளில் உள்ள மலைப்பகுதிகள் உள்ளிட்ட சில இடங்களில் வன்முறைகள் நடைபெற்று வந்தன. மேலும், நேற்று (ஆக.28) அப்பகுதிகளில் அடையாளம் தெரியாத நபர்களால் 5 வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டது.

இதனையடுத்து, இந்த பிரச்சினையைக் கட்டுக்குள் கொண்டுவர மணிப்பூர் காவல் துறையினரும், மத்திய பாதுகாப்புப் படையும் ஒன்று சேர்ந்து குற்றவாளிகளைக் கைது செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். மணிப்பூரின் பல்வேறு மாவட்டங்களில் மொத்தம் 127 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து, பாதுகாப்புப் படையினர் நடத்திய சோதனையில், இம்பால்-கிழக்கு, இம்பால்-மேற்கு, கக்சிங், தௌபால், காங்போக்பி மற்றும் பிஷ்னுபூர் மாவட்டங்களிலிருந்து 70 ரவுண்டு தோட்டாக்களை மீட்டனர்.

மேலும், மணிப்பூரின் பிஷ்ணுபூர், காக்சிங், தௌபால், சுராசந்த்பூர் மற்றும் இம்பால் மேற்கு மாவட்டங்களின் விளிம்புகள் மற்றும் தொலைதூரப் பகுதிகளில் பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து சோதனையை மேற்கொண்டனர். அதில், சுராசந்த்பூர் மாவட்டத்திலிருந்து ஏழு ஆயுதங்களும், 111 துப்பாக்கி தோட்டாக்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

தீவிர சோதனையில் பாதுகாப்பு படை
தீவிர சோதனையில் பாதுகாப்பு படை

தொடர்ந்து, காங்போக்பி மாவட்டத்தில் நடத்தப்பட்ட சோதனையின் போது ஒரு பயங்கர ஆயுதம் கண்டறியப்பட்டு மீட்கப்பட்டது. மேலும், அந்த ஆயுதத்தை வைத்திருந்த இரண்டு பேரும் கைது செய்யப்பட்டனர். மணிப்பூர் காவல் துறையினரும், மத்திய பாதுகாப்புப் படையினரும் இணைந்து நடத்திய இந்த தேடுதல் வேட்டையில் மொத்தம் 3ஆயிரத்து 662 பேரைக் கைது செய்துள்ளனர்.

அடையாளம் தெரியாத நபர்களால் தீ வைப்பு
அடையாளம் தெரியாத நபர்களால் தீ வைப்பு

இதற்கிடையே, இம்பால் மேற்கு பகுதியைச் சேர்ந்த செக்யூரிட்டி ஒருவர் வீட்டில் வைத்திருந்த மூன்று துப்பாக்கிகள் மற்றும் 105 வெடி மருந்துகளை அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். அவற்றையெல்லாம் காவல் துறையினர் இன்று (ஆக.28) பத்திரமாக மீட்டனர்.

இதையும் படிங்க: கோவையில் அதிகரிக்கும் குற்றச் சம்பவங்கள்.. இரவு பகலாக தனிப்படை போலீசார் தீவிர சோதனை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.