ETV Bharat / bharat

மணிப்பூர் விவகாரத்தால் நாடே வெட்கப்படுகிறது - பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆளுநர் தலா ரூ.10 லட்சம் நிதியுதவி!

author img

By

Published : Jul 30, 2023, 12:37 PM IST

மணிப்பூர் மாநிலத்தில் வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்கள் உள்ள நிவாரண முகாம்களுக்குச் சென்று அவர்களுடன் கலந்துரையாடிய ஆளுநர் அனுசுயா உய்கே, அமைதியை நிலைநாட்ட அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதாக உறுதி அளித்தார்.

மணிப்பூர் விவகாரத்தால் நாடே வெட்கப்படுகிறது - பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆளுநர் தலா ரூ.10 லட்சம் நிதியுதவி!
மணிப்பூர் விவகாரத்தால் நாடே வெட்கப்படுகிறது - பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆளுநர் தலா ரூ.10 லட்சம் நிதியுதவி!

தேஜ்பூர் : மணிப்பூர் மாநிலத்தில் ஏற்பட்ட இன மோதல்களில் பாதிக்கப்பட்டவர்கள் உள்ள சுராசந்த்பூர் பகுதியில் உள்ள நிவாரண முகாம்களுக்கு, ஜுலை 29ஆம் தேதி வருகை தந்த ஆளுநர் அனுசுயா உய்கே, பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆறுதலைத் தெரிவித்தார்.

எதிர்க்கட்சிகளின் 21 உறுப்பினர்களைக் கொண்ட குழு வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று உள்ள அதே நாளில், அம்மாநில ஆளுநர் உய்கே, நிவாரண முகாம்களுக்கு வருகை தந்திருப்பது குறிப்பிடத்தக்கது. கும்பலால் நிர்வாணமாக ஊர்வலம் செல்லப்பட்ட இரு பெண்களின் குடும்பங்களுக்குத் தலா ரூ.10 லட்சம் மதிப்பிலான காசோலைகளையும் ஆளுநர் வழங்கினார்.

36 அசாம் ரைபிள்ஸ் ஹெலிபேடில் தரையிறங்கிய ஆளுநர் உய்கே, செயின்ட் பால்ஸ் இன்ஸ்டிடியூட் பகுதியில் அமைக்கப்பட்டு உள்ள நிவாரண முகாமுக்குச் சென்றார், பின்னர் 160-170 பேர் இடமாற்றம் செய்யப்பட்ட ரெங்காய் உள்ள பகுதிக்குச் சென்றார். பாதிக்கப்பட்ட மக்கள் தங்கியுள்ள நிவாரண முகாம்களை பார்வையிட்டு அவர்களுடன் கலந்துரையாடினார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுகாதார கருவிகள், குழந்தைகளுக்கு உண்ணும் பொருட்கள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள், ரொக்கப் பணம் உள்ளிட்டவைகளை வழங்கினார்.

இளைஞர்கள் சட்டத்தை கையில் எடுக்க வேண்டாம் என்றும், சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட வேண்டாம் என்றும் ஆளுநர் உய்கே, வேண்டுகோள் விடுத்து உள்ளார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல், அனுதாபம் மற்றும் ஆதரவை வழங்குவதற்காக முகாம்களுக்குச் சென்று வருவதாக ஆளுநர் அனுசுயா உய்கே குறிப்பிட்டு உள்ளார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கம் இழப்பீடு வழங்கும். அமைதியை மீட்டெடுக்க முடிந்த அனைத்தையும் செய்வதாக அவர் உறுதி அளித்தார்.

துய்பாங் பகுதியில் முன்னாள் ராணுவ வீரர்களின் குடும்பத்தினருடனும் ஆளுநர் உய்கே கலந்துரையாடினார். குக்கி இன்பி, ITLF, மனித உரிமைகளுக்கான குக்கி பெண்கள் அமைப்பு உள்ளிட்டோரையும் சந்தித்துப் பேசினார். ராஜ்ய சைனிக் வாரியத்தின் தலைவர் என்ற முறையில், ஆளுநர் உய்கே, ஏழு முன்னாள் படைவீரர் குடும்பங்களுக்கு சில நிவாரணப் பொருட்களுடன், ரூ. 15,000 வழங்கினார்.

மக்களின் பிரச்னைகளை கேட்டறிவதற்காக இரண்டாவது முறையாக மாவட்டத்திற்கு வந்ததாகத் தெரிவித்து உள்ள உய்கே, "இதுவரை, சில பிரச்னைகள் தீர்க்கப்பட்டுள்ளன. சாலை மறியல் காரணமாக மருந்து கொண்டு செல்வது கடினமாக இருந்ததால், கொசு வலைகள், தார்பாய், சுகாதார கருவிகள் மற்றும் பிற நிவாரணப் பொருட்களை தன்னுடன் கொண்டு வந்ததாக" குறிப்பிட்டு உள்ளார்

பொதுவெளியில் நிர்வாணமாக அணிவகுத்துச் செல்லப்பட்ட இரண்டு ‘சகோதரிகளை’ நேரில் சந்தித்து அவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் அளித்து ஆழ்ந்த அனுதாபத்தை வெளிப்படுத்தியதாக அவர் கூறினார். "இந்த சம்பவத்தால் முழு நாடும் வெட்கப்படுகின்றது. அவர்களுக்கு தேவையான நிதி மற்றும் தார்மீக ஆதரவு வழங்கப்படும்" என்று ஆளுநர் உய்கே உறுதி அளித்து உள்ளார்.

இதையும் படிங்க: நெருப்பாய் விண்ணில் பாய்ந்த PSLV-C56

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.