உத்தரப் பிரதேசம் மாநிலம் ஷாம்லி மாவட்டத்தில் மொஹல்லா பகுதியைச் சேர்ந்தவர் மன்சூரி. 26 வயதாகும் இவரின் உயரம் 3 அடி மற்றும் 2 அங்குலம் மட்டுமே தான். உயரத்தைக் காரணம் காட்டி, இவரின் திருமணம் பல முறை தள்ளிச்சென்றதாகக் கூறப்படுகிறது.
பல பெண்களைப் பார்த்தும், அனைவரும் வேண்டாம் என ரிஜெக்ட் செய்ததால், மன உளைச்சலுக்கு ஆளான மன்சூரி காவல் நிலையத்தை நோக்கிப் புகாரளிக்க புறப்பட்டார். அங்கிருந்த பெண் காவல் ஆய்வாளரிடம் தனது பிரச்சினையை எடுத்துக்கூறிய மன்சூரி, தனக்கான பெண்ணை கண்டுபிடிக்க உதவுமாறு கேட்டுள்ளார். மன்சூரியின் கதையைக் கேட்ட அவர், நிச்சயம் உதவி செய்வதாகத் தெரிவித்துள்ளார்.
இவர் ஏற்கனவே திருமணத்திற்கு பொண்ணு கிடைக்கலனு, முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உள்பட பல அரசு அலுவலர்களுக்குக் கடிதம் அனுப்பியிருந்ததும் குறிப்பிடத்தக்கது. ரம்ஜான் பண்டிகை வருவதற்கு முன்பு திருமணம் செய்ய வேண்டும் என்ற முனைப்புடன் இருக்கும் மன்சூரி, தேனிலவுக்குக் கோவா, மணாலி, சிம்லா இடங்களுக்குச் செல்ல முடிவு செய்துள்ளார் என்பது கவனிக்கத்தக்கது.
இதையும் படிங்க: வாட்ஸ்அப்பில் ஆபாசம்... தனிமையில் அத்துமீறல்: ஆசிரியரைக் காக்கத் துடிக்கும் அலுவலர்கள்!