பெங்களூர்: முனி ஹனுமன்தப்பா என்பவர் 5 மாடுகளும், 6 ஆடுகளும் தனது வீட்டுத் தொழுவத்தில் வைத்து வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில்,இவரது மாடுகளை ஒருவர் அடிக்கடி பாலியல் வன்புணர்ச்சி செய்து வருவதாக அக்கம்பக்கத்தினர் ஹனுமன் தப்பாவிடம் புகார் அளித்துள்ளனர்.
இதனையடுத்து, இதை செய்யும் நபரைக் கையும் களவுமாகப் பிடிப்பதற்காகத் தனது தொழுவத்தில், ஹனுமந்தப்பா மறைந்திருந்துள்ளார்.
அப்போது வழக்கம் போல் அங்கு வந்த அந்த நபர் பசுவை வன்புணர்ச்சி செய்யத் தொடங்கியுள்ளார். இதனைக் கண்ட ஹனுமந்தப்பா அவரைக் கையும் களவுமாகப் பிடித்துள்ளார்.
அதன்பின், இதுகுறித்து காவல்துறையிடம் புகார் அளித்ததையடுத்து, சம்பவ இடத்திற்கு காவல் துறையினர் விரைந்து வந்தனர். அவர்கள் நடத்திய விசாரணையில், பசுவை வன்புணர்ச்சி செய்தது டவனகேரேவைச் சேர்ந்த வெங்கடேஷ் (22) என்பது தெரியவந்துள்ளது.
இச்செயலில் ஈடுபட்ட வெங்கடேஷை சட்டப்பிரிவு 377இன்கீழ் கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருவதாகக் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.