இந்தூர் (மத்தியப் பிரதேசம்): உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் உறவினர் என்று கூறிக்கொண்டு இந்தூரின் தேவி அகில்யா பாய் ஹோல்கர் விமான நிலையத்தில் விஐபிக்கள் பெறும் சலுகைகளைப் பெற்று, நபர் ஒருவர் அடிக்கடி பயணித்து வந்தது கண்டறியப்பட்டுள்ளது.
மும்பையில் வசித்து வந்த புனீத் ஷா எனும் இந்நபர், வணிகரீதியான பயணங்களுக்காக இந்தூருக்கு அடிக்கடி வருகை தந்து, உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் உறவினராக நடித்து விமான நிலையத்தில் விஐபிகளுக்கான சலுகைகளைப் பெற்று வந்துள்ளார்.
தொடரந்து அந்நபர் மீது விமான நிலைய மேலாளர் ஒருவருக்கு சந்தேகம் வலுக்கவே, புலனாய்வு அமைப்பைக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அந்த நபர் போலியானவர் என்பது தெரியவந்தது.
தொடர்ந்து அந்நபர் மீது ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டதற்காக முதல் தகவல் அறிக்கை பதிந்தும், பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தும் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: ’அடையாளம் தெரிந்தே தானிஷை கொலை செய்த தலிபான்கள்’ - அமெரிக்க ஊடகம் அறிக்கை!