டெல்லி: கடந்த நவம்பர் மாதம் நியூயார்க்கிலிருந்து இருந்து டெல்லி வந்த ஏர் இந்தியா விமானத்தில் ஆண் பயணி ஒருவர் வயதான பெண் பயணி மீது அநாகரீகமான முறையில் சிறுநீர் கழித்துள்ளார். இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் பயணி டாடா குழுமத் தலைவர் கே. சந்திரசேகரனுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
மேலும் அந்த பெண் அச்சம்பவத்தின் அதிர்ச்சியிலிருந்து தான் மீள்வதற்கு எந்த விதமான முயற்சியும் விமான குழுவினர் மேற்கொள்ளவில்லை எனக் குற்றம்சாட்டினார். ஏர் இந்தியா நிர்வாகி இச்சம்பவம் குறித்து கூறுகையில், இச்சம்பவம் குறித்து விசாரிப்பதற்கு தனிக்குழு அமைத்துள்ளது. மேலும் இச்செயலில் ஈடுபட்ட அந்த ஆண் பயணியை இனி விமானத்தில் பயணம் செய்யக்கூடாதவர்கள் பட்டியலில் சேர்க்க அரசிடம் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் பயணி எழுதிய கடிதத்தில், எனக்கு நடந்த இந்த அதிர்ச்சி சம்பவத்திற்குப் பின் விமான குழுவினர் விரைந்து நடவடிக்கை எடுக்கவில்லை. விமானக்குழு எனது பாதுகாப்பிற்கு எந்த விதமான முயற்சியும் மேற்கொள்ளவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளார்.
இதையும் படிங்க: ஜம்முவின் சம்பா மாவட்டத்தில் இரவு நேர ஊரடங்கு!