ETV Bharat / bharat

சபரிமலையில் மகரவிளக்கு பூஜைகள் தொடக்கம்!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் 2ஆம் கட்ட மண்டல பூஜை தொடங்கிய நிலையில், மகர விளக்கு பூஜைகள் தொடங்கி உள்ளன.

சபரிமலையில் மகரவிளக்கு பூஜைகள் தொடக்கம்!
சபரிமலையில் மகரவிளக்கு பூஜைகள் தொடக்கம்!
author img

By

Published : Dec 31, 2022, 5:30 PM IST

பத்தனம்திட்டா: கேரளாவில் உள்ள புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு, கார்த்திகை மாதம் முதல் விரதம் இருந்து இருமுடி கட்டி பக்தர்கள் சாமி தரிசனம் செய்வது வழக்கம். கடந்த 2 ஆண்டுகள் கரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த ஆண்டு அதிகளவு பக்தர்களால் சபரிமலை விழாக்கோலமாக காட்சி அளித்து வருகிறது.

இதன் முதல் கட்டம் கடந்த நவ.17 அன்று தொடங்கி டிச.27 அன்று மண்டல பூஜையுடன் முடிவடைந்தது. இதனையடுத்து 3 நாட்கள் கோயில் நடை சாத்தப்பட்டது. இந்த நிலையில் மகரவிளக்கு விழாவுக்காக நேற்று (டிச.30) தலைமை தந்திரி கண்டராரு ராஜீவாரு ஐயப்பன் சன்னதியை திறந்தார். தொடர்ந்து மாளிகைபுரம் மேல்சன்னதியை ஹரிஹரன் நம்பூதிரி திறந்தார்.

இதனையடுத்து இன்று (டிச.31) அதிகாலை 3 மணியளவில் மகரவிளக்கு பூஜைகள் தொடங்கி நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து வரும் ஜன.14ஆம் தேதி மகரவிளக்கு விழா நடைபெற உள்ளது. மேலும் ஜன.20ஆம் தேதி யாத்திரை காலம் நிறைவடைவதைக் குறிக்கும் வகையில் சபரிமலை சன்னதி மூடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சபரிமலை கோயிலுக்கு 39 நாட்களில் சுமார் ரூ.223 கோடி வருவாய்; பின்னணி என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.