புனே (மகாராஷ்டிரா): மகாராஷ்டிரா மாநிலம், புனேவில் உள்ள சஸ்வாத் பகுதியில் பப்பு என்கிற நிலேஷ் ஜெய்வந்த் ஜக்தாப் ஹோட்டல் கடை நடத்தி வருகிறார். இவரின் ஹோட்டல் கடை அருகில் மூன்று யாசகர்கள் தினமும் அமர்ந்து யாசகம் பெற்று அங்கேயே உறங்கி வந்ததாகத் தெரிகிறது.
இதனால் ஆத்திரமடைந்த நிலேஷ், கடந்த மே 23ஆம் தேதி மூன்று யாசகர்களையும் கடுமையாகத் தாக்கி, கடையில் இருந்த வெந்நீரை எடுத்து வந்து யாசகர்கள் மீது ஊற்றியுள்ளார். இதனால் படுகாயமடைந்த அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் சிகிக்சைப் பலனின்றி மூன்று பேரும் உயிரிழந்தனர். இதுகுறித்து அப்பகுதியினர் காவல் துறையினரிடம் புகார் அளித்தும் வழக்குப்பதிவு செய்யாமல் இருந்துள்ளனர். ஹோட்டல் உரிமையாளர் நிலேஷ், அத்தொகுதி எம்எல்ஏவின் உறவினர் என்பது தெரிய வந்தது. இதனால் காவல் துறையினருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதாகவும் தெரிகிறது.
இதையடுத்து, கடந்த மே 30ஆம் தேதி ஹோட்டல் உரிமையாளர் நிலேஷ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தலைமறைவாக உள்ள நிலேஷை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: குஜராத்தின் ரசாயன தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து