மும்பை : லதா மங்கேஷ்கர், நிமோனியாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கு ஜன.8ஆம் தேதி கரோனா பெருந்தொற்று பாதிப்பு ஏற்பட்டது. தொடர்ந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், ஜன.28ஆம் தேதிவரை வெண்டிலேட்டரில் வைக்கப்பட்டிருந்தார்.
பின்னர், உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதால், வெண்டிலேட்டர் சிகிச்சை நிறுத்தப்பட்டது. இதற்கிடையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு அவரின் உடல்நிலை மோசமடைந்தது. தொடர்ந்து, பிப். 5ஆம் தேதி மிகவும் கவலைக்கிடமானதால், மீண்டும் வெண்டிலேட்டரில் வைக்கப்பட்டு அவருக்கு உயிர் காக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஆனால், சிகிச்சை பலனின்றி நேற்று (பிப். 6) காலை அவரது உயிர் பிரிந்தது. அவருக்கு வயது 92. லதா மங்கேஷ்கரின் இறப்பு செய்தியை அவரது தங்கை உஷா மங்கேஷ்கர் உறுதிசெய்தார்.
நாடு முழுவதும் இன்றும், நாளையும் (பிப். 7) இரண்டு நாள்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால், இரண்டு நாள்கள் தேசிய கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்படும்.
இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக இன்று(பிப்.07) ஒரு நாள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : நீங்கா நினைவுகளுடன் விடைபெற்றார் இசைக்குயில் லதா மங்கேஷ்கர்!