டெல்லி: ராஜஸ்தான் மாநிலம், உதய்பூரில் தையல்காரர் கன்ஹையா லால் கடந்த ஜூன் 28ஆம் தேதி, தலை துண்டிக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் பதிவிட்டதற்காகவே கன்ஹையா லால் கொலை செய்யப்பட்டதாக தெரியவந்தது. இந்த வழக்கை என்ஐஏ விசாரித்து வருகிறது.
இந்த சம்பவம் நடப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்பாக (ஜூன் 21) மகாராஷ்ட்ரா மாநிலம் அமராவதி மாவட்டத்தில் மருந்தக உரிமையாளர் உமேஷ் கோல்ஹே என்பவர் கொல்லப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முக்கிய குற்றவாளியாக கருதப்படும் இர்ஃபான் கானை தேடி வருகின்றனர். இந்த நிலையில், கோல்ஹேவும் நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக வாட்ஸ்அப் குழுக்களில் பதிவிட்டிருந்ததாக தெரிகிறது. இந்த வழக்கிற்கும் கன்ஹையா கொலை வழக்கிற்கும் ஒற்றுமை இருப்பதால், உமேஷ் கோல்ஹே கொலை வழக்கையும் மத்திய உள்துறை அமைச்சகம், என்ஐஏவிடம் ஒப்படைத்துள்ளது.
இதையும் படிங்க: 'உதய்பூர் கொலை: பயங்கரவாத அமைப்புக்குத்தொடர்பில்லை...ஆனால்':என்ஐஏ புதிய தகவல்!