ETV Bharat / bharat

பக்தர்களின்றி பூரி ரத யாத்திரை தொடங்கியது!

பூரி ஜெகந்நாத் ஆண்டு ரத யாத்திரை தொடங்கியது. கோவிட் ஊரடங்கு அமலில் இருப்பதால் பக்தர்கள் கலந்துகொள்ள அனுமதிக்கவில்லை.

Lord Jagannath's Rath Yatra
Lord Jagannath's Rath Yatra
author img

By

Published : Jul 12, 2021, 8:48 AM IST

பூரி : ஒடிசாவின் பூரியில் ஜெகந்நாத் ரத யாத்திரை இன்று (ஜூலை 12) தொடங்கியது. கோவிட் -19 பரவலையடுத்து, பக்தர்கள் விழாவில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படவில்லை.

ரத யாத்திரை தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக பக்தர்கள் இல்லாமல் பூரியில் நடைபெறுகிறது. முன்னதாக, மக்கள் கூடுவதைத் தடுக்கும் பொருட்டு, மாவட்ட நிர்வாகம் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 11) இரவு 8 மணி முதல் இரண்டு நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவு விதித்ததாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பூரி மாவட்ட ஆட்சியர் சமர்த் வர்மா கூறுகையில், மக்கள் தங்கள் தொலைக்காட்சி வாயிலாக ரத யாத்திரையை காணலாம். இந்தச் சேவையை வழங்க பல்வேறு தொலைக்காட்சி மற்றும் இணையதளங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஜெகந்நாத் கோயிலிலிருந்து குண்டுச்சா கோயில் வரை 3 கிலோமீட்டர் நீளமுள்ள கிராண்ட் ரோடு வழியாக மருத்துவ அவசரநிலை ஊர்தி உள்ளிட்டவை தவிர அனைத்து நடவடிக்கைகளும் தடைசெய்யப்பட்டுள்ளன. பாதுகாப்புப் பணியில் 65 படை வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.

குடியிருப்பு வீடுகள், ஹோட்டல்கள், லாட்ஜ்கள் மற்றும் விருந்தினர் மாளிகைகளில் இருந்து திருவிழாவைக் காண பக்தர்கள் அதிக அளவில் கூடிவருவதைத் தடுக்க பாதுகாப்புப் படையினரும் கூரை உச்சியில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

மூன்று ரதங்களான பலபத்ராஸ் தலத்வாஜா, பகவான் ஜெகந்நாத் நாடிகோஷ் மற்றும் தேவி சுபத்ராஸ் தர்படலன் ஆகியவை தயார் செய்யப்பட்டுள்ளன.

பூரி மன்னர் கஜபதி மகாராஜா திவ்யஸ்ங்கா தேப் சேரா பஹ்ரா சடங்குகளை (தேர் துடைப்பது) செய்தபின் பிற்பகல் 3 மணி முதல் தேர் இழுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

தெய்வ ஊர்வலம் காலை 8 மணி முதல் தொடங்கும். திருவிழாவிற்கு முன்னதாக, சேவையாளர்கள், பாதுகாப்பு காவலர்கள், கோயில் அலுவலர்கள், மாவட்ட நிர்வாக அலுவலர்கள், ஊடக நபர்கள் என சுமார் 8 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்களுக்கு ஆர்டிபிசிஆர் சோதனை செய்யப்பட்டுள்ளது” என்றார்.

இதையும் படிங்க : பூரி ஜெகந்நாத் ரத யாத்திரைக்கு தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.