இந்து புராணக் கதாபாத்திரமான கிருஷ்ணனின் பிறந்தநாளை இந்துக்கள் கிருஷ்ணஜெயந்தியாக கொண்டாடுகின்றனர். இந்த நாள் கோகுலாஷ்டமி எனவும் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் விரதம் மேற்கொள்வது, கிருஷ்ணனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபடுவது என சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இதனையடுத்து இந்தியா முழுவதும் உள்ள இந்துக்கள் இன்று(ஆகஸ்ட் 19) கிருஷ்ணஜெயந்தியை கொண்டாடி வருகின்றனர். குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் கிருஷ்ணஜெயந்தி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
குடியரசுத் தலைவர்: குடியரசுத் தலைவஙர் திரெளபதி முர்மு விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், ‘ஜென்மாஷ்டமி திருநாளில் நாட்டு மக்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். கிருஷ்ணரின் வாழ்க்கையின் லீலை, மக்கள் நலனுக்காக தன்னலமற்ற செயல்களை செய்ய கற்றுக்கொடுக்கிறது. எண்ணம், சொல், செயலால் அனைவரின் நலனுக்கும் முன்னுரிமை அளிக்க இந்தப் புனிதப் பெருவிழா நம் அனைவருக்கும் உத்வேகத்தை அளிக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்’ என தெரிவித்தார்.
பிரதமர்: பிரதமர் மோடியில் வாத்துத்செய்தியில், ‘ஜென்மாஷ்டமி திருநாளில் நாட்டு மக்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். பக்தி மற்றும் மகிழ்ச்சியுடன் கூடிய இந்த திருவிழா அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் நல்ல அதிர்ஷ்டத்தை கொண்டு வரட்டும். வாழ்க ஸ்ரீ கிருஷ்ணா!’ என கூறினார்.
-
समस्त देशवासियों को श्री कृष्ण जन्माष्टमी की हार्दिक शुभकामनाएँ। pic.twitter.com/mMLoWNFweM
— Amit Shah (@AmitShah) August 19, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">समस्त देशवासियों को श्री कृष्ण जन्माष्टमी की हार्दिक शुभकामनाएँ। pic.twitter.com/mMLoWNFweM
— Amit Shah (@AmitShah) August 19, 2022समस्त देशवासियों को श्री कृष्ण जन्माष्टमी की हार्दिक शुभकामनाएँ। pic.twitter.com/mMLoWNFweM
— Amit Shah (@AmitShah) August 19, 2022
உள்துறை அமைச்சர், அமித்ஷா அவரது ட்விட்டர் பக்கத்தில், நாட்டு மக்கள் அனைவருக்கும் ஸ்ரீ கிருஷ்ண ஜென்மாஷ்டமி நல்வாழ்த்துக்கள்’ என பதிவிட்டார். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிரதமர் மோடியின் ட்வீட்டை ரிட்வீட் செய்துள்ளார். இதேபோல தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கிருஷ்ணஜெயந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
#ஸ்ரீகிருஷ்ணஜெயந்தி திருநாளை முன்னிட்டு, மாண்புமிகு தமிழக ஆளுநர் திரு.ஆர்.என்.ரவி, அவர்கள் மக்களுக்கு அன்பான நல்வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். pic.twitter.com/4HoFlyvKV3
— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) August 19, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#ஸ்ரீகிருஷ்ணஜெயந்தி திருநாளை முன்னிட்டு, மாண்புமிகு தமிழக ஆளுநர் திரு.ஆர்.என்.ரவி, அவர்கள் மக்களுக்கு அன்பான நல்வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். pic.twitter.com/4HoFlyvKV3
— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) August 19, 2022#ஸ்ரீகிருஷ்ணஜெயந்தி திருநாளை முன்னிட்டு, மாண்புமிகு தமிழக ஆளுநர் திரு.ஆர்.என்.ரவி, அவர்கள் மக்களுக்கு அன்பான நல்வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். pic.twitter.com/4HoFlyvKV3
— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) August 19, 2022
இதையும் படிங்க:TODAY HOROSCOPE ஆகஸ்ட் 19 இன்றைய ராசிபலன்