ETV Bharat / bharat

நூபுர் ஷர்மாவுக்கு கொல்கத்தா போலீஸ் சம்மன்! - நூபுர் ஷர்மாவுக்கு தொடரும் நெருக்கடி

நபிகள் நாயகம் குறித்து சர்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த விவகாரத்தில் பாஜக முன்னாள் தேசிய செய்தித் தொடர்பாளர் நூபுர் ஷர்மாவுக்கு கொல்கத்தா காவல் துறை சம்மன் அனுப்பியுள்ளது.

நூபுர்  ஷர்மா
நூபுர் ஷர்மா
author img

By

Published : Jun 13, 2022, 4:05 PM IST

மேற்கு வங்காளம் (கொல்கத்தா): பாஜக தேசிய செய்தித்தொடர்பாளராக இருந்த நூபுர் ஷர்மா கடந்த சில நாட்களுக்கு முன் தனியார் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் நபிகள் நாயகம் குறித்து, சர்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார். இதற்குப் பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.

சர்வதேச நாடுகளிலிருந்தும் நூபுர் ஷர்மாவுக்கு எதிராக கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன. இந்த நிலையில் அவரை கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்து பாஜக நடவடிக்கை எடுத்தது. இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை நாடு முழுவதும் நூபுர் ஷர்மாவுக்கு எதிராகப் போராட்டம் வெடித்தது.

உத்தரப்பிரதேசம், ஜார்க்கண்ட் மாநிலங்களில் கல் வீச்சு தாக்குதல், வாகனங்களுக்கு தீ வைத்தல் எனப் போராட்டம் வன்முறையாக மாறியது. நூபுர் ஷர்மாவை கைது செய்ய வேண்டும் என முழக்கங்கள் எழுப்பப்பட்டன. நூபுர் ஷர்மாவுக்கு எதிராக மகாராஷ்டிரா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்தநிலையில், கொல்கத்தா காவல் துறை நூபுர் ஷர்மாவுக்கு இன்று(ஜூன் 13) சம்மன் அனுப்பியுள்ளது. அதில், ஜூன் 20ஆம் தேதி நர்கெல்டங்கா காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி, மதரீதியாக சர்ச்சைக்குரிய கருத்தை வெளிப்படுத்தியது தொடர்பாக வாக்குமூலம் அளிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், திரிணாமூல் காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு பொதுச்செயலாளர் அபுல் சோஹைல், நூபுர் ஷர்மாவுக்கு எதிராக கோண்டாய் காவல் நிலையத்தில் அளித்தப்புகாரில் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: நபிகள் நாயகம் குறித்து அவதூறு: உ.பி. போராட்டத்தில் 304 பேர் கைது!

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.