திருவனந்தபுரம்: உலகம் முழுவதும் கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. நாட்டில் தினசரி கரோனா பாதிப்பு 2.3 லட்சமாக உள்ளது. இதன்காரணமாக மத்திய, மாநில அரசுகள் கரோனா கட்டுப்பாடுகளை கடுமையாக்கிவருகின்றன.
மற்ற மாநிலங்களை விட கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா மாநிலங்களில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக உள்ளது. குறிப்பாக கேரளாவில் நாளொன்றுக்கு 50 ஆயிரம் பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுவருகிறது. அதன்படி கேரளாவில் நேற்று ஒரே நாளில் 50,812 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மொத்த பாதிப்பு எண்ணிக்கை 59,31,945ஆக உயர்ந்துள்ளது. 47,649 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 55,41,834ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 8 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 311ஆக உள்ளது.
இதையும் படிங்க: நாட்டில் புதிதாக 2,34,281 பேருக்கு கரோனா