ETV Bharat / bharat

‘பாரத் ராஷ்டிர சமிதி’ - புதிய தேசிய கட்சியின் பெயரை அறிவித்தார் சந்திரசேகர ராவ் - Telangana

தெலங்கானா மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ், ‘பாரத் ராஷ்டிர சமிதி’ என்ற பெயரில் தேசிய கட்சியைத் தொடங்கியுள்ளார்.

‘பாரத ராஷ்டிர சமிதி’ - புதிய தேசிய கட்சியின் பெயரை அறிவித்தார் சந்திரசேகர ராவ்

author img

By

Published : Oct 5, 2022, 10:29 AM IST

ஹைதராபாத்: 2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் பணியில் தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் ஈடுபட்டுள்ளார். இதனிடயே விரைவில் தேசிய கட்சி தொடங்கப்படும் என்றும் அறிவித்திருந்தார்.

இதுதொடர்பாக தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் மாநில செயற்குழு கூட்டத்தை, இன்று (அக் 5) தசரா திருவிழா அன்று நடத்த முதலமைச்சர் சந்திர சேகர ராவ் திட்டமிட்டிருந்தார். அதன்படி, தனது புதிய தேசிய கட்சிக்கு ‘பாரத் ராஷ்டிர சமிதி’ (Bharat Rashtra Samithi) என்ற பெயரை அறிவித்துள்ளார். மேலும் இந்த தேசிய கட்சிக்கு, தற்போதைய டிஆர்எஸ் கட்சிக்கு உள்ள கார் சின்னத்தையே ஒதுக்குமாறு தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையும் படிங்க: தசரா நாளன்று தேசிய கட்சி தொடங்குவது குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறார் கேசிஆர்?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.