பெங்களூரு: கர்நாடகா காங்கிரஸ் கடந்த சட்டமன்ற தேர்தலில் வெளியிட்ட வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் 'க்ருஹ லட்சுமி' என்ற திட்டத்தின் மூலம் ரூ.2000 மாதந்தோறும் 1.1 கோடி குடும்பத் தலைவிகளுக்கு வழங்கும் பொது நிகழ்ச்சியை வரும் புதன்கிழமை (ஆக்.30) மைசூருவில் ஏற்பாடு செய்துள்ளது.
மைசூருவில் உள்ள புகழ்பெற்ற சாமுண்டேஸ்வரி கோயிலில் பிராத்தனை செய்த பின்னர் கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா மற்றும் துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் ஆகியோர் இந்த அறிவிப்பினை வெளியிட்டனர். மேலும் இந்த திட்டத்தின் தொடக்க விழாவில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்று தொடங்கி வைக்கவுள்ளனர் என தெரிவித்தார்.
கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா மைசூருவில் செய்தியாளர்களை சந்தித்து பேசும் போது, பா.ஜ.க அரசு கடந்த சட்டமன்ற தேர்தலில் தோல்வி அடைந்து, காங்கிரஸ் கட்சி ஆட்சி பொறுப்பேற்றது. தேர்தலுக்கு முன்பு காங்கிரஸ் கட்சி சார்பாக 5 முக்கிய வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன.
அதில், முக்கிய திட்டம் 'க்ருஹ லட்சுமி' ஆகும். இந்த திட்டத்தின் படி 1.1 கோடி குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.2000 வழங்கப்படும் இதற்காக ரூ.17 ஆயிரத்து 500 கோடி நிதி ஓதுக்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் இத்திட்டம் செயல்படுத்தபட உள்ளது என தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சியின் உத்தரவாதங்களை அமல்படுத்துவதில் சிரமம் உள்ளதா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா, திட்டங்களை அமல்படுத்துவதில் எந்த சிரமமும் இல்லை. திட்டங்களை செயல்படுத்துவதில் விருப்பம் இருந்தால் போது என தெரிவித்தார்.
மேலும் இது போன்ற திட்டங்களை செயல்படுத்தினால் அரசு நிதி சவால்களை எதிர்கொள்ள நேரிடும். எனவே இது போன்ற திட்டங்கள் செயல்படுத்த முடியாது என எதிர்ககட்சிகள் தெரிவித்துவந்தனர். ஆனால் காங்கிரஸ் அரசு இத்திட்டத்தினை வெற்றிகரமாக செயல்படுத்த உள்ளது. மேலும் 1 லட்சம் பொதுமக்களை திரட்டி இத்திட்டம் செயல்படுத்தப்படும் என தெரிவித்தார்.
ராஜ்யசபா மற்றும் லோக்சபாவிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர்கள் என்ற முறையில் கார்கே மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் இந்த நிகழ்வில் பங்கேற்க உள்ளனர் இது கட்சி விழா இல்லை எனவும் தெரிவித்துள்ளார். மேலும் சட்டமன்ற தேர்தலின் முன்பு கர்நாடகா காங்கிரஸ் கட்சி ஜந்து முக்கிய வாக்குறுதிகளை அளித்திருந்தது.
அதில் தற்போது வரை 'சக்தி', 'க்ருஹ ஜோதி' மற்றும் 'அன்ன பாக்யா' என்ற மூன்று வாக்குறுதிகள் நிறைவேற்றபட்டுள்ளன. தற்போது நான்காவது வாக்குறுதி 'க்ருஹ லட்சுமி' விரைவில் நிறைவேற்றப்பட உள்ளது. மாநிலத்தில் வேலையில்லாமல் உள்ள இளைஞர்களுக்கு உதவி தொகை வழங்குவதற்கான 'யுவ நிதி' திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என தனது பேட்டியில் சித்தராமையா தெரிவித்தார்.
இதையும் படிங்க: 2024 நாடாளுமன்றத் தேர்தல் முன்கூட்டியே வரலாம் - பிகார் முதலமைச்சர் நிதிஷ்குமார்