ETV Bharat / bharat

ராகுல் காந்தி கரங்களுக்கு வலு சேர்ப்பாரா சித்த ராமையா! - கர்நாடக

தேசிய அரசியலில் நாட்டமில்லை எனக் கூறிவரும் சித்த ராமையா, டெல்லியில் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியை சந்தித்து பேசினார். இது பல்வேறு யூகங்களை கிளப்பியுள்ளது.

Siddaramaiah
Siddaramaiah
author img

By

Published : Oct 5, 2021, 5:44 PM IST

டெல்லி : டெல்லி ஜன்பாத்தில் உள்ள சோனியா காந்தி இல்லத்தில் அவரை செவ்வாய்க்கிழமை (அக்.5) மதியம் 12 மணிக்கு கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவருமான சித்த ராமையா சந்தித்து பேசினார்.

இந்தச் சந்திப்பு சுமார் 30 நிமிடங்கள் நீடித்தது. சந்திப்பை தொடர்ந்து சித்த ராமையா செய்தியாளர்களை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் எதுவும் பேசாமல் அங்கிருந்து நகர்ந்துவிட்டார்.

கர்நாடக முன்னாள் முதலமைச்சரான சித்த ராமையா, “தேசிய அரசியலில் நாட்டமில்லை, கர்நாடக மக்களாக தொடர்ந்து உழைப்பேன்” எனக் கூறிவருகிறார்.

இருப்பினும் அவரை தேசிய அரசியலுக்கு இழுக்கும் பணிகளும் நடைபெற்றுவருகின்றன. ஏனெனில் காங்கிரஸில் மூத்தத் தலைவர்கள் ஒரங்கட்டப்பட்டுவருகின்றனர் என்ற குற்றஞ்சாட்டு எழுந்துவருகிறது. இதற்கு மத்தியில் சித்த ராமையா தேசிய அரசியலில் ஈடுபடும்பட்சத்தில் அது ராகுல் காந்தியின் கரங்களுக்கு வலு சேர்ப்பதாய் அமையும்.

காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியுடன் சித்த ராமையா சந்திப்பு

எனினும் இவ்விவகாரத்தில் இரு வேறு கருத்துகள் நிலவுகின்றன. சித்த ராமையா தேசிய அரசியலுக்கு சென்றால் மாநிலத்தில் டி.கே. சிவக்குமாரின் அரசியல் பாதை தெளிவாகும்.

ஏனெனில், கர்நாடக காங்கிரஸ் பிரிவுக்குள், சித்த ராமையா மற்றும் டி.கே. சிவக்குமார் இடையே விரிசல் உள்ளது. சிவகுமார், கர்நாடக பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவராக உள்ளார்.

கர்நாடக காங்கிரஸ் கமிட்டியில் தலைவர்கள் நியமனம் தொடர்பான முடிவு இன்னும் எட்டப்படவில்லை. முன்னதாக இது தொடர்பாக பேச டி.கே. சிவக்குமார் டெல்லி சென்றிருந்தார். இந்நிலையில் தற்போது சித்த ராமையா டெல்லி சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : நூறு சதவீதம் நலமுடன் உள்ளேன்: சித்த ராமையா.!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.