மேஷம்: காரணம் ஏதும் இல்லாமலே தனிமையில் இருக்க விரும்புவீர்கள். மற்றவர்கள் அளித்த பங்களிப்பை நீங்கள் அங்கீகரிக்கும் அதேவேளையில், அதை விட நீங்கள் அவர்களுக்கு அதிகம் செய்யும் நிலைமை இருக்கும். பணியில் மூத்தவர்களுடன் உங்கள் அறிவுத் திறனை பகிர்ந்து கொள்வீர்கள். செலவுகளை கட்டுப்படுத்தும் தேவையும் உள்ளது.
ரிஷபம்: படைப்பாற்றல் திறன் அதிகம் இருக்கும். பணி செய்யுமிடத்தில் கடுமையாக உழைக்கும் அதேநேரத்தில், புதுமைகளை புகுத்தி அதனை செயல்படுத்துவதில் ஆர்வம் அதிகம் இருக்கும். உங்களது மென்மையான பேச்சின் மூலம் பலர் உங்களை விரும்புவார்கள்.
மிதுனம்: வீட்டில் குதூகலமும் மகிழ்ச்சியும் நிலவும். வீட்டின் அலங்காரத்தை மேம்படுத்துவதற்கான விஷயங்களில் அதிக ஈடுபாடு கொண்டு குழந்தைகளுடன் அதிக நேரம் செலவழிப்பீர்கள். அவர்கள் மீது ஈடுபாடு காட்டுவதன் மூலம் நெடுநாட்களாக தீர்க்கப்படாமல் இருந்த பிரச்னைகள் தீர்க்கப்படும்.
கடகம்: காதல் துணையுடன் கடைகளுக்குச் சென்று அவர்களுக்கு பிடித்த பொருட்களை வாங்குவதில் அதிக பணம் செலவு செய்வீர்கள். அவர்களுக்காக அதிக பணம் செலவு செய்து அவர்கள் மனதை மகிழ்விக்க வேண்டும் என்று நிர்ணயம் செய்து கொண்டு உள்ளீர்கள். பதிலுக்கு அவர்களும் உங்களது மனதை மகிழ்விக்கும் வகையில் பரிசுகளைத் தருவார்கள்.
சிம்மம்: விஷயங்கள் எதிர்பார்த்த வகையில் நடக்கும் சாத்தியம் மிகவும் குறைவு. அதனால் அது குறித்து கவலைப்படாமல், நடப்பவை நல்லதற்குத்தான் என்ற எண்ணத்துடன் மனதை தேற்றிக் கொள்ள வேண்டும். உங்களுக்கு ஏற்ற சரியான நபரை நீங்கள் சந்தித்து, அதன் மூலம் உங்களது கற்பனைத் திறனை வளர்த்துக் கொள்ளும் வாய்ப்பு உள்ளது.
கன்னி: சூழ்நிலைக்கு ஏற்றபடி நடந்து கொள்ளும் தன்மையின் மூலம் உங்களைச் சுற்றியிருக்கும் மக்களை மகிழ வைப்பீர்கள். காதல் வயப்பட்டிருப்பவர்களுக்கு எதிர்பாராத சம்பவம் நேரிடலாம். அதனால் கவலை கொள்ளத் தேவையில்லை. அவை உங்களுக்கு சாதகமான விஷயமாகவே இருக்கும். குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடவும். குடும்பப் பொறுப்பை எடுத்துக் கொண்டு உங்களது கலாச்சாரத்தை மதிப்பதன் மூலம் குடும்ப உறவு பலப்படும்.
துலாம்: இன்று சாதகமான நாளல்ல. அது குறித்து மனம் வருத்தம் அடைய வேண்டிய அவசியம் ஏதும் இல்லை. நல்லது நடக்கவில்லை என்றால், அது கெடுதல் என்று பொருள் இல்லை. சிறிது மன அழுத்தங்கள் இருந்தாலும், மாலையில் மகிழ்ச்சியாக இருப்பது உறுதி. மேலும் ,வாழ்க்கைத் துணையுடன் முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசனை செய்வீர்கள்.
விருச்சிகம்: வாழ்க்கை என்பது ஒரு சிறந்த ஆசிரியர் ஆகும். அதை அனுபவித்து அறிவீர்கள். கடும் போட்டியின் மத்தியில், சந்தையில் வெற்றி பெறுவது எப்படி என்பதை அறிந்து கொள்வீர்கள். இதனால் எதிர்ப்புகள் வந்தாலும், அது உங்களை பாதிக்காது. தவறு செய்வது மனித இயல்பு, அதை மன்னிப்பது கடவுள் இயல்பு என்பதை நினைவில் கொள்ளவும். அதனால் தவறு செய்தாலும், அது குறித்து கவலை கொள்ள வேண்டாம்.
தனுசு: உங்கள் மனதிற்கு பிடித்தவர்கள் உடன் நேரத்தை செலவிடுவீர்கள். வாழ்க்கைத் துணையுடன் முக்கியமான விஷயங்கள் குறித்து ஆலோசனை செய்வீர்கள். குடும்பத்தினரும், நண்பர்களும் தங்கள் ஆலோசனைகளையும் வழங்குவார்கள். உற்சாகமான குதூகலமான மாலை காத்திருக்கிறது.
மகரம்: பொருத்தமான துணையை கண்டறிந்து, அவர்களிடம் உங்களது உணர்வுகளை வெளிப்படுத்துவீர்கள். உங்களைப் பொறுத்தவரை உங்கள் குடும்பம்தான் உலகம் ஆகும். கடந்த வருடங்களில் இல்லாத அளவிற்கு, உங்கள் உணர்வுகளை அதிகம் வெளிப்படுத்துவீர்கள். நீங்கள் வெளிப்படுத்தும் நிபந்தனையற்ற அன்பு, பல மடங்கு உங்களை வந்து சேரும்.
கும்பம்: இன்றைய தினத்தை உங்களுக்காக செலவிட விரும்புவீர்கள். எனினும் இது தேவையான அமைதியையும் நிம்மதியையும் கொடுக்காது. விருப்பமில்லாத நிகழ்வுகளின் காரணமாக மன வருத்தம் ஏற்படும். நீங்கள் வணங்கும் கடவுளின் மூலம்தான் தேவையான மனோ சக்தி கிடைக்கிறது என்பதை புரிந்து கொள்வீர்கள்.
மீனம்: வீழ்த்த இயலாத நபராக இருப்பீர்கள். பல வகையான பணிகளை ஒரே நேரத்தில் மேற்கொள்ளும் திறனைப் பெற்று இருப்பீர்கள். உங்களது செயல் திறனைப் பார்த்து மற்றவர்கள் பாராட்டுவார்கள். பெண்களைப் பொறுத்தவரை, இன்று லாபகரமான நாளாக இருக்கும் என்பதால் ஊக்கம் பெறுவார்கள்.
இதையும் படிங்க: Weekly horoscope: பணி உயர்வு கிடைக்க உள்ள ராசிகள்!